சித்த மருத்துவம்

என்றும் இளமைக்கு திரிபாலா சூரணம்

திரிபலா சூரணம்

திரிபாலா எனப்படுவது கடுக்காய் – நெல்லிக்காய் – தான்றிக்காய் ஆகியவையாகும். உடலில் ஏற்படும் உட்புற வெளிப்புற புண்களுக்கு திரிபாலா சூரணம் நல்ல பலனைத் தரும். மன அமைதி இழப்பு என்னும்   மனப் புண்ணிற்கு இது நல்ல மருந்தாகும். இது திரிபாலா குக்குலு என்று மாத்திரையாகவும் தயாரிக்கப்படுகிறது.

திரிபாலா 10 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 1/4 லிட்டராக வடிகட்டி சூடு ஆரிய பிறகு ஆசன வாயில் இந்தக் தண்ணீரை கொண்டு கழுவிவர ஆசனவாய் புண்கள் ஆறிவிடும்.

தினசரி இதன் சூரணம் 5 கிராம் அளவு பாலில் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர நல்ல ஞாபக சக்தி உண்டாகும். வயோதிகத்தை நெருங்க விடாமல் இளமையாக இருக்க உதவுகிறது.

மலச்சிக்கலை போக்கும் குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் தொண்டைக்கட்டு நீங்கும் நீண்ட நாட்களாக உள்ள காய்ச்சல் தீரும்.

கண்நோய்கள்- மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து. உடல் இளைப்பு – சர்க்கரை வியாதி – இரத்த சோகைக்கும் இது நல்ல பலனைக் கொடுக்கும்.

Buy Online http://naturekart.in/product/triphala-sooranam/

Leave a Comment

eleven − 6 =

error: Content is protected !!