நமது உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல். நமது உடலின் சுத்திகரிப்பு நிலையமாக கல்லீரல் விளங்குகிறது. கல்லீரல் உடலின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமான உறுப்பாகும் இது பாதிக்கபட்டால் இரத்த குறைபாடு ஏற்படும். இருதயம் பலவீனமாகும். மூளையும் சோர்வடையும், சிறுநீரகமும் சரியாக வேலை செய்து. எனவே உடலின் மிக முக்கியமான உறுப்பான கல்லீரலை சரியான முறையில் பராமரிக்க சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

கல்லீரல் பலம் பெற

  • சுண்டக்காய் செடியின் துளிர் இலை எடுத்து அதனுடன் இஞ்சி, தேங்காய், புளி இவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர கல்லீரல் நோய்கள் தாக்காமல் கல்லீரல் பலப்படும்.
  • திராட்சை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும்.
  • சீந்தில் கொடி பொடியை பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர கல்லீரல் பலம் பெறும்.
  • கரிசலாங்கண்ணி இலை 10, வேப்பிலை 5, துளசி 5, கீழாநெல்லி சிறிதளவு எடுத்து காலை மாலை சாப்பிடுவதற்கு முன் இவற்றை சாப்பிட்டு வர (15 நாட்களுக்கு ) கல்லீரல் சம்பந்தமான நோய்கள் தீரும். கல்லீரல் பலப்படும்.
  • தேனுடன் தக்காளி பழச்சாறு கலந்து சாப்பிட கல்லீரல் பலப்படும்.
  • ரோஜாப்பூவுடன் சீனா கற்கண்டு சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து ஒரு வாரம் வெயிலில் வைத்து பிறகு காலை மாலை சாப்பிட்டு வர கல்லீரல் பலமடையும்.

கல்லீரல் வீக்கம்

  • நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  • கீழாநெல்லி இலையை 10 கிராம் அளவு எடுத்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். உப்பில்லா பத்தியமாக இருந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். கல்லீரலை செயல்பட வைக்கும்.

கல்லீரல் பராமரிப்பு

நீண்ட நாள் வாழ கல்லீரல் மிகவும் அவசியமான உறுப்பாகும்.இதனை சரியாக பராமரிக்க வெங்காயம், கரிசலாங்கண்ணி, பொன்னாக்கண்ணி, பச்சை காய்கறிகள், உலர்ந்த பழங்கள் உண்ண வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 9 =