மூலிகைகள்

இரத்தத்தை சுத்தமாக்கும் தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால் காரத்தின் வீரியத்தை குறைக்கபயப்படுகிறது. தேங்காய்ப்பால் இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பை தடுக்கிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.

வாதமாம் பித்தமுறும் வன்கரப்ப னும்படருந்
தாதுவும் விருத்தியாந் தாழ்குழலே – யோதநல்ல
அன்ன மிறங்கு மதியுரிசை யுண்டாகுந்
தென்னங்காய்ப் பாலாற் றெளி

குணம்

மிகுமதுரத்தால் உணவை உட்செலுத்துகின்ற தேங்காய்ப்பாலால் வாதவிகாரம், பித்தவாதிக்கம், கரப்பான், சுக்கில விருத்தி முதலியவை உண்டாகும்.

பயன்கள்

  • தேங்காய்ப்பாலை அன்னத்துடன் சேர்த்து உண்ண ரத்தம் சுத்தமாவதுடன் தாது பலப்படும்.
  • தேங்காய்ப்பாலை வாய் கொப்பளிப்பதாலும் உள்ளுக்கு அருந்துவதாலும் வாய்ப்புண் குணமாகும்.
  • தேங்காய்ப்பால், வெந்தயம் சேர்த்து கஞ்சியாக செய்து சாப்பிட இடுப்பு வலி, கீல்வாதம், பாரிசவாதம், ரணம், தேக அழற்சி, மூலம், வாய் நாற்றம் ஆகியவை குணமாகும்.
  • தேங்காய்ப்பாலுடன் கசகசா சேர்த்து அரைத்து பிழிந்தெடுத்த பாலை குழம்புகளில் சேர்க்க மிளகாயின் வீரியத்தை குறைத்து நல்ல ருசியை கொடுக்கும்.
  • தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்க கூந்தல் நல்ல மென்மையையுடன் இருக்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!