மூலிகைகள்

வேலிப்பருத்தி மருத்துவ பயன்கள்

.jpg - வேலிப்பருத்தி மருத்துவ பயன்கள்

வேலிப்பருத்தி இதய வடிவ இலைகளையும் மென்மையான முட்களை கொண்ட காய்களையும் பாலுள்ள பிசுபிசுப்பான ஏறு கொடியினம். முட்டை வடிவ விதைகளை கொண்டது. இதனை உந்தாமணி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் காணப்படும். இதன் வேர், இலை ஆகியவை மருத்துவ பயனுடையது.

ஆலித் தெளிந்தநோ யத்தனையுந் தீருமே
வேலிப் பருத்தியதன் மெல்லிலையால் வேலொத்துக்
கண்டிக்கும் வாதங் கடுஞ்சந்நி தோஷமும்போ
முண்டிக்கும் வாசனையா மோது

குணம்

உணவில் மணத்தை தருகின்ற வேலிப்பருத்தி பலவித நோய்களின் உபத்திரமும், வாதநோய், விஷம், சந்நி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக்குடைச்சல், குத்தல், நடுக்கல், சுவாசநோய், பலவிததடிப்பு, அக்கினி மந்தம் இவைகள் நீங்கும்.

பயன்கள்

  • குழந்தைகளுக்கு நுரையீரலில் கபம் அதிகரித்து சுவாசம் மிகுந்திருந்தால் வேலிப்பருத்தி இலையையும், துளசியும் சேர்த்து அதனுடன் கல் உப்பு ஒன்று சேர்த்து நன்றாக கசக்கி பிழிந்தெடுத்த சாற்றில் 1 தேக்கரண்டி அளவு கொடுக்க சிறிது நேரத்தில் கபம் வெளியாகும்.
  • வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.
  • வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும். தொடக்கநிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.
  • 5 கிராம் அளவு வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
  • வெளிப்பருத்தியின் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவு வரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள் நீங்கும்.

Leave a Comment

fifteen + 9 =

error: Content is protected !!