அழகு

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான மூலிகைகள்

  • தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
  • மருதாணி – 10 கிராம்
  • செம்பருத்தி – 10 கிராம்
  • கறிவேப்பிலை – 10 கிராம்
  • ஆவாரம் பூ – 10 கிராம்
  • கரிசலாங்கண்ணி – 10 கிராம்
  • வெட்டிவேர் – 5 கிராம்
  • சோற்றுக் கற்றாழை – 50 கிராம்

மூலிகை கூந்தல் தைலம் செய்முறை

மருதாணி , செம்பருத்தி , கறிவேப்பிலை , ஆவாரம் பூ , கரிசலாங்கண்ணி , சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளயும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கயும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொண்ணிறமாக மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நாட்களுக்கு பிறகு பயன் படுத்தவும்.

பயன்கள்

  • தினமும் தலைக்கு தேய்த்துவர தலைமுடி உதிர்வதை தடுக்கும்.
  • முடி நன்றாக செழித்து வளரும்.
  • கண் எரிச்சல் தீரும்.
  • வாரம் ஒருமுறை தேய்த்து குளிக்க உடல் சூட்டை தணிக்கும்.
  • இரவு பாதங்களில் தேய்க்க தூக்கம் நன்றாக வரும்.

மூலிகை கூந்தல் தைலம் தயாரிக்கும் முறை வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!