மூலிகைகள்

உடலுறவில் இன்பத்தை அதிகரிக்கும் முருங்கைப்பூ

முருங்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணமிருக்கிறது, அதில் முருங்கை பூவுக்கென்று சில மருத்துவக்குணமிருக்கிறது. முருங்கைப்பூ முக்கியமாக காமம் பெருக்கியாக செயலாற்றுகிறது.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகு
மழிவிந்து வும்புஷ்டி யாகு – மெழிலா
ரொருங்கையக லாக்கற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி

முருங்கைப்பூவின் மருத்துவ பயன்கள்

  • ஒரு கைப்பிடி முருங்கைப்பூவை சுத்தம் செய்து பாலில் காய்ச்சி நன்றாக கடைந்து அதனுடன் சிறிதளவு கற்கண்டு சேர்த்து கலக்கி மாலை ஒரு வேளை சாப்பிட்டு வர தாது பலப்படும். உடலுறவு இன்பத்தை அதிகரிக்கும்.
  • துவரம் பருப்புடன் முருங்கைப்பூவை வேகவைத்து சிறுதளவு தேங்காய் அரைத்து சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் போட்டு கடைந்து சாப்பிட்டு வர விந்தணு குறைபாடு நீக்கும், தாது பலப்படும்.
  • முருங்கைப்பூ தாது விருத்திக்காக செய்யப்படும் லேகியங்களில் சேர்ப்பது வழக்கமாகும்.
  • முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், வாய் கசப்பு ஆகியவை நீங்கும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!