மூலிகைகள்

பேரீச்சம்பழம் மருத்துவ பயன்கள்

பேரீச்சம்பழம் உடலுக்கு மிகுந்த உறுதியை தரும் சத்துக்களை உடையது.  தினமும் 2 அல்லது 3 எண்ணிக்கையில் சாப்பிட்டு வரலாம். பேரீச்சம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இதன் சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு சென்றடையும். இப்படி சாப்பிடுவதால் அதிக உணவு உண்ணும் உணர்வை கட்டுப்படுத்தும்.

பேரீந் தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சைசுர
நீரார்ந்த வைய நெடுந்தாகம்-பேரா
விரத்தபித்த நீரிழிவி லைப்பு மரோசி
யுரத் தமலக் கட்டுமறு மோர்.

குணம்

பேரீச்சம்பழத்தால் நீரைச் சுரப்பிக்கின்ற பித்தரோகம், மதரோகம், மூர்ச்சை, சுரம், சிலேத்துமம், நீர்க்கோவை, தாகம், ரத்தபித்தம்,மேகமூத்திரம்,வாயிலைப்பு, சுவையின்னை ஆகிய இவைகள் நீங்கும்.

பயன்கள்

  • இது தேகத்திற்குப் பலத்தைக் கொடுக்கும். ஜீரணசக்தியை உண்டாக்குவதுடன் மலச்சிக்கலை நீக்கும்.
  • இது உஷ்ணத்தை உண்டாக்குவதால் இத்துடன் வாதுமைப்பருப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் அதன் வீரியம் குறைந்து தேகத்தைத் தழைக்கச் செய்யும். இன்னும் அரோசகம், சுரம், தாகம், பித்தம் முதலியவற்றை நீக்கும்.
  • குடலில் இருக்கும் கிருமிகளை அழித்து செரிமானத்தை சரிசெய்கிறது.
  • பேரீச்சம்பழம் இரத்த சோகையை நீக்குகிறது. முடி உதிர்தலைதடுக்கிறது.
  • இதில் புரதம், வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!