மூலிகைகள்

பிரமத்தண்டு மருத்துவ பயன்கள்

மருத்துவ பயன்கள் - பிரமத்தண்டு மருத்துவ பயன்கள்

காம்பில்லாமல் பலமடல்களான உடைந்த கூரிய முட்களுள்ள இலைகளையும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனம். பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிறப் பூச்சு காணப்படும். குடியோட்டிப் பூண்டு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது.

குணம்

நோய்த் தணித்து உடல் தேற்றவும் தூக்கம் உண்டாகவும் பயன்படும்.

புண்ணெடுக்க ரப்பான் பொடிசிரங்கு சில்விஷங்கள்
சண்ணிருமல் மேகவளி தண்மேக – மெண்ணிற்
படியோட்டு மாவிஷமும் பல்நோயுந் தீருங்
குடியோட்டுப் பூண்டா ற் குலைந்து

பயன்கள்

  • இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை குணமாகும்.
  • இதன் இலைச்சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.
  • இலையை அரைத்து கட்டி வர கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
  • 20 பூக்களை நீரில் ஊறவைத்துக் குளித்து வர 1 (48 நாட்கள்) மண்டலத்தில் கண்நோய்கள் குணமாகும்.
  • பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண்வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண்கூச்சம், நீர் வடிதல், கண்ணெரிச்சல் ஆகியவை தீரும்.
  • வேர்சூரணம் 10 அரிசி எடை வெந்நீரில் கலந்து குடித்தால் மலப்புழுக்கள் வெளியேறும்.
  • இதன் சாம்பலால் பல் தேய்த்து வர பல்ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல்கரைதல் ஆகியவை குணமாகும்.
  • இலை சூரணம், விதைச் சூரணம், கலந்து 3 அரிசி எடை காலை, மாலை தேனில் கொள்ள இருமல், நுரையீரல், சளிஇருமல் தீரும்.

Leave a Comment

three + 16 =

error: Content is protected !!