உணவே மருந்து
தூதுவேளை தோசை
தூதுவேளை இதய பலவீனத்தை சரி செய்து மார்பு சளி, இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த மூலிகையாகும். இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு சிறந்தது. தூதுவளை இலையை தோசை செய்து சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
தூதுவேளை இலைகளை சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, அரிசியை ஒருமணிநேரம் ஊறவைத்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அரிசி, தூதுவேளை இலை, சீரகம், மிளகு ஒன்றாக சேர்த்து அரைத்து தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
பயன்கள்
- மார்பு சளி, இருமல் குணமாகும்.
- உடல் புத்துணர்வு பெற்று பலம் பெறும்.
- மலச்சிக்கலை நீக்கும்.
- இதய படபடப்பு நீங்கி இதயம் பலம் பெறும்.