மூலிகைகள்

திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலை மணமுடைய இலைகளையும் வெளிறிய கருஞ்சிவப்பு மலர்க்கதிர்களையும் உடைய சிறு செடியினம். பச்சிலை, உருத்திரச்சடை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்பெறும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வளர்க்கப்படுகிறது . இதன் இலை, விதை ஆகியவை மருத்துவ பயனுடையது.

திருநீற்றுப் பச்சைசி லேஷ் மசர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே – பெரிய
சுரத்திரத்த வாந்தி சுரமருசி நில்லா
வுருத்திரச்ச டைக்கே யுரை

குணம்

திருநீற்றுப்பச்சை என்கிற உத்திரச்சடைக்கு கபவாந்தியும், சுரம், இரத்தவாந்தி ஆகியவற்றை குணமாக்கும். உடல் சூட்டை தனித்து உடல் தேற்றும் மருந்தாகவும் செயற்படும்.

மருத்துவ பயன்கள்

  • திருநீற்றுப் பச்சிலை இலையை முகர்வதால் தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும்.
    இலையை அரைத்து பூச கட்டி கரையும்.
  • 10 மிலி திருநீற்றுப்பச்சிலை சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி, மேல் சுவாசம், இருமல், வயிற்று வாயு தீரும். குடலுக்கு பலத்தை கொடுக்கும்.
  • இலையை மெல்லுவதால் வாய்ப்புண் குணமாகும்.
  • இலையை இதமாக நெருப்பில் வாட்டி பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளி காதில் விட காது மந்தம் தீரும்.
  • 5 கிராம் அளவு திருநீற்றுப் பச்சிலை விதையை 100 மிலி நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டு வயிற்று கடுப்பு, இரத்த கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை ஆகியவை குணமாகும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + thirteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!