சித்த மருத்துவம்சூரணம்
திரிபலா சூரணம் செய்முறை
திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்தது.இச்சூரணம் நல்ல ஞாபக சக்தியை கொடுக்கிறது. என்றும் இளைமையாக இருக்க திரிபலா ஒரு சிறந்த சூரணம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
தேவையானவை
- கடுக்காய்
- நெல்லிக்காய்
- தான்றிக்காய்
செய்முறை
சமளவு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு கடுக்காய் விதைகளை நீக்கி மூன்றையும் நன்றாக வெயிலில் உலர்த்தி எடுத்து ஒன்றாக இடித்து சலித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
திரிபலா சூரணம் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
பயன்கள்
- நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
- இளமையாக இருக்க உதவுகிறது.
- மலச்சிக்கலை நீக்கும்.
- கண் நோய்கள் தீரும்.
- மஞ்சள் காமாலைக்கு சிறந்தது.
- இரத்த சோகையை நீக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
- குடலில் உள்ள புழுக்களை நீக்கும்.
- இருமல் -ஆஸ்த்துமாவை குணமாக்கும்.