சித்த மருத்துவம்

வாதம், வாய்வு கோளாறுகளை நீக்கும் திரிகடுகு லேகியம்

திரிகடுகு லேகியம்

பொதுவாக லேகியம் என்பது தண்ணீரை போல் இல்லாமல் கெட்டியாக நீர்மநிலையில் இருக்கும் தமிழில் இதனை இளகம் என்று அழைப்பர். திரிகடுகு மூலிகைகளை கொண்டு லேகியம் தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.

மந்தமொடு மூலத்தின் வாயுதீரும்
மைந்தனே புளி கையும் ஆற்றச் சொல்லு
அந்தமுடன் இன்னம் ஒரு லேகியம் கேள்
அன்பான திரிகடுகு பலம் தான் ஒன்று
சொச்தமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் சீரகமும் கிராம்பு ஏலம்
துரிதமுடன் வகைக்கு அரைப்பலமே வாங்கி
விந்தையாய்ச் சுத்தி செய்து சூரணித்து
லிதமான பனவெல்லம் பலம்தான் அஞ்சே.

அஞ்சாகும் பாகுபோல் காய்ச்சிக் கொண்டு
அப்பனே சூரணத்தைப் பாய்ச்சிக் கிண்டே
மிஞ்சாமல் நெயுழக்கு அரைக்கால் தேற்றான்
விட்டும் அதை லேகியம்போல் கிண்டி வாங்கிலக்
கொஞ்சமாய் கொட்டைப்பாக்களவு மைந்தா
குணமாக இருவேளை இருபதுநாள் கொள்ளு
நெஞ்சாரத் தீருகிற வியாதி கேளு
நிலையான வாதமொடு வாய்வும் போமே

வாயுவொடு உஷ்ணமும் பித்தவாய்வும்
வயிற்றுவலி கடுப்புபுளி எரிச்சல்பேதி
தேயுவென்ற அக்கினி மாந்தம் வாந்தி
தீராத வஸ்தி சுரம் அஸ்திவெட்டை
பாயுறதோர் பொருமல் என்றவாயுக்கிராணி
பறக்குமடா லேகியத்தில் அயச்செந்தூரம்
பேயுமன்றிப் பணவிடைதான் கூட்டிஉண்ணப்
பெலமான வாயுவெல்லாம் புரண்டு போமே

செய்முறை

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தலா 25 கிராம் அளவு எடுத்து அதனுடன் சீரகம், கிராம்பு, ஏலக்காய் தலா 10 கிராம் அளவு சேர்த்து சுத்தி செய்து இடித்து சூரணமாக்கி வைத்துக்கொண்டு. பனைவெல்லம் 200 கிராம் அளவு எடுத்து பாகுபோல் காய்ச்சி அந்த சூரனைத்தை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். லேகிய பதத்திற்கு வரும் போது நெய், தேன் சிறிதளவு சேர்த்து இறக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

சாப்பிடும் முறை

இந்த லேகியத்தை கொட்டைப்பாக்கு அளவு காலை மாலை என இருவேளை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வர வாதம் மற்றும் வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகும்

Leave a Comment

twenty − 8 =

error: Content is protected !!