உடல் நலம்

டெங்கு காய்ச்சலை குணமாக்க சித்த மருத்துவ முறைகள்

காய்ச்சலை குணமாக்க சித்த மருத்துவ முறைகள் - டெங்கு காய்ச்சலை குணமாக்க சித்த மருத்துவ முறைகள்

கொசுக்களால் பரவப்படும் ஒரு வித காய்ச்சல். தசை மூட்டு வலிகள் இந்நோயின் போது அதிகமாக இருக்கும். உடல் செந்நிறமான தடிப்புடன் காணப்படும். கொசுக்கள் கடிக்கும் போது மனித உடலில் தொற்றும் நான்கு முக்கிய வகை வைரஸ்களால் இது உண்டாகின்றது. ‘ஏடெஸ் ஏஜிப்டி (aedes aegypti) ‘ என்ற கொசுக்களால் தான் அதிகளவு பரவுகிறது.

காய்ச்சல் ஆரம்பிக்கும் போது இது 104 முதல் 109 டிகிரி வரை இருக்கும். லேசான தலைவலியும் பிறகு மூட்டுவலியும் தசைவலியும் ஏற்படும் வாந்தி குமட்டல் உண்டாகும். நிணநீர் வீக்கம் இருக்கும். அம்மை போன்ற கொப்புளங்கள் உண்டாகும்.

உடம்பில் பல வழிகளில் இரத்தம் வழியும். இரத்தத்தை உறைய வைக்கும் பாதுகாப்பு அணுக்களை அழித்து விடுவதால் இது ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்காதது என்றாலும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். நோய் விட்ட பின்னும் மூட்டில் பல நாட்கள் வலி இருக்கும். உடல் சோர்வு இருக்கும்.

மலேரியா காய்ச்சலுக்கு ஒரு மருந்து டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மருந்து என்று அதிகம் பிரிவுகள் சித்தமருத்துவத்தில் கிடையாது. கொசுவால் வரும் எல்லாக் காய்ச்சலுக்கும் ஒரே மருந்துதான்.

மருத்துவம்

  • நிலவேம்புடன் சிறிதளவு பப்பாளி இலையையும் சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம்.
  • நிலவேம்பு விஷ்ணு கிராந்தி கடுகுரோகணி இம்பூரல் (சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் )ஆகியவற்றை சேர்த்து கசாயம் வைத்து குடிக்கலாம்.
  • சுக்கு, கடுக்காய், நிலவேம்பு, வேப்பம்பட்டை, சீந்தில் கொடி, பேய்ப்புடல் ஒவ்வொன்றிலும் 10 கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து குடிக்க தீரும்.
  • நோய் விட்ட பிறகு இரும்புச் சத்து மிக்க உணவுகளையும் பழச் சாறு, காய்கறி சூப் முதலியவற்றையும் வெள்ளாட்டு எலும்பு சூப்பையும் சாப்பிடலாம்.

Leave a Comment

9 − four =

error: Content is protected !!