சித்த மருத்துவம்

கொரோனா (கோவிட்-19) வைரசும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவம்

சித்தம் என்றால் முழுமை என்று பொருள். சித்த மருத்துவம் இப்பொழுது உலகில் உள்ள நோய்கள் மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் தெளிவாக விளக்கியுள்ளது. எனவே சித்த மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவம் ஆகும்.

சித்த மருத்துவம் பல்வேறு காலங்களில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் தொகுப்பாகும். அந்த வகையில் சித்தர்களின் முதன்மையானவராக கருதப்படுபவர் அகத்தியர். இவர் 12000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. திருக்குறளிலும், தொல்காப்பியத்திலும் சித்த மருத்துவம் மக்கள் மத்தியில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்ததற்கான தரவுகள் உள்ளன.

பொதுவாக தமிழ் மாதங்களில் தை மாதம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். இந்த காலகட்டங்களில் தொற்று நோய்கள் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் சில வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சித்த மருத்துவத்தை பயன்பாட்டில் கொண்டு நோய் பரவுவதை தடுத்து வந்தனர்
திருவிழாக்கள் கொண்டாடுதல் மூலம் குறிப்பிட்ட நாட்கள் வரை மக்கள் தனித்து பிற ஊர்களுடனான போக்குவரத்து, பண்டமாற்று முறை முதலியவற்றை தவிர்த்து சுய கட்டுப்பாடு விதித்து வாழ்ந்து வந்தனர். திருவிழாக்களில் மஞ்சள் நீராடுதல் மற்றும் வேப்பிலைகளை பெருமளவில் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளால் நோய்கிருமிகள் பரவுதலை தடுத்து வந்தனர்.

அரிசி மாவு, சுக்கு, மிளகு சேர்த்த மாவிளக்கு செய்து சிறப்பு உணவுகளாக தயார் செய்து சாப்பிட்டு வந்தனர். மேலும் புளி கரைசல், வெல்லம், வாழைப்பழம் சேர்த்த பித்த நோய்களை தடுக்கும் பானகம் திருவிழாக்களில் மக்களுக்கு வழங்கப்படும்.

இது போன்று சித்த மருத்துவ தற்காப்பு, உணவு மற்றும் மருத்துவ முறைகளை பண்டைய கால மக்களில் வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒன்றியிருந்ததால் அவர்கள் தொற்று நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு திறனை இயற்கையாகவே வளர்த்துக் கொண்டு இருந்தனர்.
அண்மையில் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்ட மருந்து செய்கருவிகள் மற்றும் மருந்து கலன்கள் மூலமாக சித்தமருத்துவத்தின் தொன்மையை மேலும் உறுதி செய்யமுடிகிறது. இத்தகைய தொன்மையான சித்த மருத்துவம், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களுக்காக அமைக்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட தொடங்கி, இந்த மருத்துவத்தின் தனித்துவதால் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவை கடந்து தற்போது பல நாடுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

சித்தர்கள் மக்கள் நோயின்றி நீண்ட நாள் வாழ்வதற்கான எண்ணற்ற மருத்துவ மற்றும் தற்காப்பு முறைகளை அருளியுள்ளார்கள். உலகில் நோய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பாதிப்புகளும் பெருகி கொண்டிருக்கையில் சித்தர்கள் நோய்களின் எண்ணிக்கையை மொத்தம் 4448 என்று அறுதியிட்டு சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் அதன் உட்பிரிவுகளை விளக்கி அதற்கான சிகிச்சை முறைகளையும் வகுத்துள்ளார். நாளுக்கு நாள் புது புது காய்ச்சல்கள் தோன்றி மக்களை அவதிக்குள்ளாகும் நிலையில் சித்தர்கள் சுரம் ( காய்ச்சல்கள்) 64 வகை என்று வகுத்து அதன் அறிகுறிகள், பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை விளக்கியுள்ளார்கள்.

சித்த மருத்துவத்தில் நோயில்லாமல் வாழ வழிகாட்டும் நோயில்லா நெறி, வந்த நோய்களை குணமாக்கி மீண்டும் வராமல் தடுக்கக்கூடிய காயகற்பம். மூலிகை, தாது மற்றும் சீவ கற்பகங்கள் மற்றும் யோக போன்ற எண்ணற்ற சிறப்பு மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் மட்டுமே இருக்கும் சிறப்பு.

கோவிட் -19

புதிய கொரோனா வைரஸ் ( நோவல் கொரோனா வைரஸ் ) முதன் முதலில் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்டது. இது உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) கோவிட் – 19 என்ற பெயரில் பிப்ரவரி 11, 2020 – ல் அடையாளப்படுத்தப்பட்டது. கோவிட் 19 திற்கு சார்ஸ் மற்றும் மெர்ஸ் போற்ற கிரீட வடிவில் உருவ ஒற்றுமை இருந்ததாலும், இதன் நோய் பரவும் தன்மை மற்றும் நோயினால் உண்டாகும் பாதிப்புகள் இதன் மற்ற குடும்ப வைரக்களிலிருந்து வேறுபட்டு புதியதாக உள்ளதால் புதிய நோவல் கொரோனா வைரஸ் என பகிரப்பட்டது.

புதிய ஒரு நுண்ணுயிரி தொற்று ஏற்படும் போது அந்த நுண்ணுயிரியின் அமைப்பு, பரவும் வகை, தொற்றும் தன்மை, அது உண்டாக்கும் நோய்நிலைகள் மற்றும் குறிகுணங்கள் போன்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறும் போது தான் ஆராச்சியாளர்கள் அதற்கான தடுப்பு முறைகளையும், அந்த நோய்க்கான மருந்துகளையும் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்டாலும் அந்த மருந்தானது மருந்து கண்டுபிடிப்பின் நான்கு படிநிலைகளை கடந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு சில ஆண்டுகள் வரை ஆகக்கூடும். தொற்ற நோய் நிலைகளில் இது போன்ற ஆராய்ச்சி படிநிலைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டாலும் தொற்றும் நோய்களில் அதுவும் கோவிட்-19 போன்ற கொள்ளை நோய் நிலைகளில் இந்த ஆராய்ச்சி படிநிலைகளில் முக்கியமானதாக கருதப்படும் மாற்று மருந்தியல் என்னும் Reverse pharmacology பயன்தரக்கூடும்.

கொரோனா வைரஸின் மூலக்கூறு அமைப்பு


அந்த வகையில் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளால் அசாதாரண நிலை ஏற்பட்ட போது, சித்த மருத்துவத்தோடு கூடிய ஒருங்கிணைந்த மருத்துவம் நோயிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதனை சரிசெய்து கொள்ளவும் பேருதவியாய் இருந்தது. அதுபோல தற்போது கோவிட்-19 னால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளை மருத்துவர்கள் மற்றும் ஆராச்சியாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியாலும், ஆராச்சியாலும் விரைவில் ஒரு தீர்வினை எட்டமுடியும்.

கொரோனா வைரஸின் கட்டமைப்பு புரதங்களை (structural proteins )பார்க்கும்போது வைரஸின் செயல்பாடுகள் தெளிவாக விளங்குகிறது. அதன் கட்டமைப்பில், ஸ்பைக் கிளைகோபுரோட்டின் – S புரதம், ஒருங்கிணைந்த சவ்வு கிளைகோபுரோட்டின் – M புரதம், ஹேமக்ளுட்டினின் எஸ்டெரேஸ் கிளைகோபுரோட்டீன் – HE புரதம், சிறிய சவ்வு புரதம்- E புரதம், நியோலியோகாப்சிட் புரதம் –N புரதம் ஆகியவற்றை காண்கிறோம்.

இவற்றில் S – புரதம் பிளவு Cleavage கொண்டு ரிசெப்டாரோடு இணைதல் (receptor binding) மற்றும் சவ்வு இணைவு (membrane fusion – syncytium formation) ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிளவுபட்ட S-புரதம் (cleaved S-Protein) மட்டுமே சவ்வு இணைவை (membrane fusion) தூண்டக்கூடும் என முந்தய சில ஆய்வுகள் கூறுகின்றன.

பெரும்பாலான வைரஸ்கள்(எ.கா) SARS-CoV க்கான ரிசெப்டார் ACE2 மற்றும் MERS-CoV க்கான ரிசெப்டார் CD26 என உறுதியாக தெரிகிறது. ஆனால் மனித உடம்பில் முழுமையான பிளவு ஏற்பட ட்ரிப்சின் முதன்மையாக தேவைப்படுகிறது.

அது போலவே, ரூஜியன் லு,( Roujian lu et.al) என்பவர் தனது ஆய்வின் மூலமாக தற்போது உலகளவில் பரவி இருக்கும் கொரோனா வைரஸின் (COVID-19/SARS-COV2) ரிசெப்டார்ACE2 ஆக இருக்கக்கூடும் என உரைத்துள்ளார். மேலும் இந்த வைரஸ் பக்க சூலை (நிமோனியா என்னும் நோயினை ஏற்படுத்தும் நோய்கிருமிகளில் ஒன்றாக தெரிகிறது.

பொதுவாக M-புரதம் என்பது உறை மற்றும் உள் கோர் விரியன் ஆகியவற்றின் வளரும் கட்டமைப்பிற்கும் பொறுப்பாகும். கட்டமைப்பு புரதத்தில் ஹேமக்ளுட்டினின் Hemagglutinin இருக்கும் உயிரினங்களில் HE புரதம் பொதுவாக இருந்துவருகிறது. இது எரித்ரோசைடுகளுடன்(erythrocyte) இணைப்பை ஏற்படுத்தி மற்றும் ஹேமக்ளுட்டினேஷனை (Hemagglutination) ஏற்படுத்துகிறது. ஹேமக்ளுட்டினேஷன் (Hemagglutination) மற்றும் ஹேமாட்சார்ப்ஷன் (hemadsorption) அசே Assay மூலம் இதை தெளிவுபடுத்த முடியும் மற்றும் இது ஹோஸ்ட்- நோய்க்கிருமி(Host cell – pathogen interation )உயிரணு செல் தொடர்புகளை விளக்கும்.

E-புரதம் என்பது விரியன் அசெம்பிளிக்கு(Virion assembly) வழிவகுக்கிறது. மேலும் இந்த E-புரதம் கொரோனா வைரஸில் மட்டுமே கூடுதலாக இருக்கிறது. பொதுவாக இந்த புறத்தில் சிஸ்டைன் தொகுப்புகள் (cysteine residues) நிறைந்து இருக்கிறது. விரியோனின் உள் மையத்தில் உள்ள N-புரதம் மரபணுவின் பாஸ்போரிலேஷனை (Phosphorylation) தூண்டுகிறது. அதன் அமைப்பில் செரின் எச்சங்கள் (serine residues) அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த புரதம் ரிபோநியூக்ளியஸ் (Ribonuclease) என்ற நொதிக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட (Limited Protection) பாதுகாப்பை அளிக்கும்.

மொத்தத்தில், பெரும்பாலான கட்டமைப்பு புரதங்களில் சிஸ்டைன் எச்சங்கள் (cysteine residues) அதிகமாக காணப்படுகிறது. சிஸ்டைன் என்பது பொதுவாக தையோல் தொகுப்புடன் (thiol group) கூடிய ஒரு அமினோ அமிலமாகும். மேலும் இது புரதத்தின் மூலக்கூறு கட்டமைப்பை (molecular structure) பராமரிக்கிறது. ஆரம்பத்தில் இருந்து பார்த்தோமானால் S-புரத பிளவுகளில், சிஸ்டைன் எச்சங்களில் (cysteine residues) ஏதேனும் மாற்றங்கள் (mutation) நிகழ்ந்தால் அது சவ்வு இணைவை தாமதப்படுத்தும் (delays membrane fusion). இறுதியாக விரியன் அசெம்பிளியில்(Virion assembly) , E-புரதத்தின் சிஸ்டைன் எச்சங்களில் ஏதேனும் குறுக்கீடு (அ) மாறுதல் ஏற்பட்டால், புதிதாக உருவான ஆர்.என்.ஏ மரபணுவில்(New RNA genome) நேரடியாக பிரதிபலிக்கக்கூடும். அதாவது இந்த அமினோ அமிலத்தின் உருவமைப்பிலோ அல்லது வேலைப்பாடுகளில் ஏதேனும் இடையூறு ஏற்படும் போது ஆர்.என்.ஏ மரபணுவில் (RNA Genome) உள்ள புரதங்களின் சிதைவு ஏற்படக்கூடும் என்பது தெளிவாக உணரப்படுகிறது.

இக்கூற்றுகளில் இருந்து உணர்வது யாதெனில் சிஸ்டைன் எச்சங்களின் வேலைப்பாடுகளில் இடையூறு ஏற்படுத்த வேண்டும். நமது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் (heavy metals) சேர்த்த மருந்துகளுக்கு சிஸ்டைன் எச்சங்களுடனான (cysteine residues) இணைவுத்திறன் (higher affinity) அதிகமாக உள்ளது. எனவே இத்தகைய மருந்துகளை நாம் பிராயோபடுத்தினால் வைரஸ் கிருமியின் RNA மரபணுவில் (RNA Genome) உள்ள புரதங்கள் சிதைந்து போகும். அதாவது மூலக்கூறுபாடு சிதையும். இதனை தொடர்ந்து வைரஸ் கிருமியை புரதங்கள் செயல் இழந்து, கிருமி முழுமையாக செயல் இறந்து வீழும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!