உடல் நலம்
கொரோனா வைரஸ் யாரை தாக்கும்? வராமல் தடுப்பது எப்படி ?
கொரோனா வைரஸ் என்றால் என்ன
கொரோனா என்பது காற்றில் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமி, கொரோனா என்றால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர் அது போல இந்த வைரஸ் கிருமி இருப்பதால் இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
யாரை தாக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இதன் பாதிப்பு உடனே ஏற்படுகிறது. கொரோனா மட்டுமல்ல பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை உடனே தாக்குகிறது.
- 3 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் , 60 வயதை கடந்தவர்களுக்கு, கர்ப்பினி பெண்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் எனவே இவர்களுக்கு வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது.
- வைரஸ் தாக்கியதும் அதன் அறிகுறிகள் தெரியாது 7 முதல் 14 நாட்கள் பிறகுதான் தெரிய வரும்.
அறிகுறிகள்
- கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் வரும், அதன் பிறகு வறட்டு இருமல் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்.
- நோய் எதிர்ப்பு திறன் குறைவானவர்களுக்கு கொரோனாவைரஸ் தாக்கப்பட்டால் உடல் நிலை மிக மோசமான நிலைமைக்கு செல்லும்.
- உடல் வெப்பத்தை விட அதிக அளவு வெப்பம் இருந்தால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.
வராமல் தடுக்க
- இது வரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. முடிந்த அளவு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு சமைத்த பின்னே சாப்பிட வேண்டும்.
- கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் , சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
- வைரஸ் தாக்குதல் உண்டானவர்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும். வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து கொள்ளலாம்.
சிகிச்சை முறைகள் என்ன?
இந்த வைரஸ் புதிதாக தற்போது தான் கண்டுபிடிக்க பட்டுள்ளதால் இதற்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இருமல், காய்ச்சல் உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.