சித்த மருத்துவத்தில் கொரோனா தடுப்பு முறைகள்
கை, கால்களை சுத்தம் செய்வதற்கு
சித்த மருத்துவத்தில் கை, கால்களை சுத்தம் செய்வதற்கும், வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் படிகார நீர், மின்சாரத் தைலம், வேள்விப்புகை போன்றவற்றை பயன்படுத்தலாம்
படிகார நீர்
அவர்களின் கூற்றுப்படி ஆய்வக விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில் படிகாரமானது வகை வைரஸ் கிருமிகளின் தொற்றில் வைரஸ்கி ருமிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. இதனை கொண்டு கை கால்களை கழுவுவதால் வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்கலாம்.
படிகார நீர் 30 மிலி வெந்நீரில் கலந்து, முகம் வாய், மூக்கு போன்ற உறுப்புகளை கழுவலாம்.
மின்சார தைலம்
2012ன் கூற்றுப்படி தைமாலில் உள்ள மோனேடெர்பீன்ஸ் வைரஸ்களின் வைரியான்களை நேரடியாக தாக்கி அழிக்கிறது என்ற தரவுகள் இருக்கிறது. அவர்களின் கூற்றுப்படி மென்தாலானது பரிசோதனையில் சூடோரேபிஸ் வைரஸ் மற்றும் வைரஸ்கள் பரவுவதை பெருமளவில் கட்டுப்பாத்தியதாக கூறியுள்ளார்.
ஓம உப்பு, புதினா உப்பு, பச்சை கற்பூரம், சோடாப்பு இவைகளை கலந்து வைத்து பெறப்படுவது மின்சாரத் தைலம் என்று பெயர். இந்த தைலத்தினை கைகுட்டைகள் மற்றும் முக கவசங்களில் தடவி பயன்படுத்தும் போது நோய்க்கிருமிகளை தடுத்து சிறப்பான பாதுகாப்பினைத் தரக்கூடும்.
வேள்விப்புகை
சித்த மருத்துவத்தில் காற்றின் மூலமாக பரவும் பல்வேறு தொற்று கிருமிகளை பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு புகை வகைகளையும், தூபங்களையும் வைத்திய சாலைகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பயன்படுத்தி வந்தனர்.
கோவிட்-19 தொடுதல், காற்று, மலம், சிறுநீர் போன்றவற்றின் வாயிலாக விரைவில் பரவக்கூடிய தொற்று நோயகள் இருப்பதால் அதன் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக 108 மூலிகைகளை கொண்ட ஹோம திரவியங்களை புகையாக்கி நோய் கிருமி பெரிதும் வாழும் மருத்துவமனைகளின் வாயில்கள், கழிவறைகள் மக்கள் கூடும் இடங்களில் புகைக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் தூபங்களை பயன்படுத்தலாம். சித்த மருத்துவ நோயில்லா நெறியில் வேள்விப் புகை ஆயுளை வளர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் 14 நாட்களுக்கு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நிக்கோட்டின் சிகரெட்களுக்கு பதிலாக இந்த மூலிகை சிகரெட்டை பயன்படுத்த செய்வதன் மூலமாக பெருமளவில் நோய் பரவுவதை தடுக்கலாம் என்ற கருதுகோளும் உள்ளது.
கோவிட்-19 தடுப்பு மருந்துகள்
வ.எண் | மருந்து | அளவு | துணை பொருட்கள் | நாட்கள்/வேளை | அறிகுறிகள் |
1 | நிலவேம்பு குடிநீர் | 30-60 மிலி | – | 14 நாட்கள் / 2 வேளை வெறும் வயிற்றில் | பித்த சுரம், குளிர் சுரம் |
2 | கப சுர குடிநீர் | 30-60 மிலி | சாந்த சந்திரோதயம் மாத்திரை – 1 (அ) கோரோசனை மாத்திரை -1 | 3 நாட்கள் / 2 வேளை வெறும் வயிற்றில் | கபசுரம் ( இருமலுடன் காய்ச்சல், தொண்டை கரகரப்பு) |
3 | இஞ்சி, பூண்டு, மிளகு குடிநீர் | 15 மிலி | 30 மிலி வெந்நீர் | 3 வேளை | தொண்டை தொற்றுநோயை தடுக்க |
4 | இஞ்சி, பூண்டு, தேன் | `15மிலி | – | 3 வேளை | தொண்டை தொற்றுநோயை தடுக்க |
5 | நெல்லிக்காய் லேகியம் | 5-10 கிராம் | பால் | 2 வேளை | நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க |
6 | மின்சாரத்தைலம் | 5 சொட்டு | 500மிலி வெந்நீர் | 3 வேளை | மேல் சுவாச பாதையை பாதுகாக்க |
7 | சீந்தில் சூரணம் | 1-2 கிராம் | தேன் | 3 வேளை | காய்ச்சல், இருமல், சைனசிடிஸ் |
8 | கஸ்தூரி கருப்பு | 60-130 மிகி | தேன்,தாய்ப்பால், இஞ்சிச்சாறு | 3 நாள் 6 வேளை | சுரம், சளி, இருமல், இரைப்பு, ராஜ உறுப்புகளை வன்மைப்படுத்தும். காபம் மீறிட்டு உடல் குளிர்ந்த போது உடலுக்கு வெப்பத்தை தந்து காக்கும் |