மூலிகைகள்

கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள்

மருத்துவ பயன்கள் - கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம சத்துக்கள் அதிக அளவில் உள்ளது மேலும் குறைவான கொழுப்பு உள்ளது எனவே கொண்டைக்கடலை நம் உடலுக்கு மிக முக்கியமானதாகும்.

கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள்

கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர மெலிந்த உடல் பெருக்கும். ஆண்மை அதிகரிக்கும். சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

கொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும். பச்சையாக இல்லாமல் அவித்து சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.

கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்.

முக்கிய குறிப்பு : வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளவது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும், எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

Leave a Comment

thirteen − eleven =

error: Content is protected !!