பெண்களுக்கு குழந்தை பேறு தள்ளிப்போக பல காரணங்கள் உள்ளன. அந்த கோளாறுகளை நீங்கி குழந்தை பேறு பெற சித்த வைத்திய முறைகள் பல உள்ளன. அவற்றில் பிரம்மமுனி கூறிய தீர்வை பற்றி காணலாம்.

வார்த்தநாள் முதல்மறு மூன்றுநாளும்
மைந்தனே ஆரையிலைகிளுவை யிலைரெண்டும்
ஆத்துமே ஐவேலி இலையுங்கூட்டி
அரைத்தாவின் பால்வெண்ணை தன்னில்கொள்ளு
ஏத்துமே ஆறாம்நாள் எண்ணெய்மூழ்கி
ஏழாம்நாள் நாயகனோடிணங்கச் சொன்னோம்
போத்தரிய மலடியுமோ பெருவாள்பிள்ளை
பெண்மலடோ உலகத்தில் இல்லதானே

மாதவிலக்கான மூன்று நாள் தலை குளித்து அதற்கு மறுநாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆரை இலை, கிளுவை இலை, ஐவேலி இலை மூன்றையும் சமமாக எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து வெண்ணையில் குழைத்து சாப்பிடவேண்டும். மருந்து சாப்பிட்ட மூன்றுநாட்களுக்கு பிறகு தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்து தலை முழுகி அடுத்தநாள் முதல் இல்லறத்தில் ஈடுபட்டு வர கர்ப்பம் தரிக்கும். பெண் மலடு என்று யாருமே இல்லை என்று பிரம்ம முனி கூறுகிறார்.

தேவையுள்ளோர் தகுந்த சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =