மூலிகைகள்

குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்

குப்பைமேனியின் ஆங்கிலப் பெயர் ‘Acalypha Indica ‘

இதற்கு பூனை வணங்கி – மேனி – தனிவல்லி – அரி மஞ்சலி – மார்கால மோகினி என்ற பெயர்களும் உண்டு.

பூனைக்கு நோய் வந்தால் குப்பை மேனி இலையில் தலையை தேய்த்துக் கொண்டு – இலையை நாக்கால் நக்கி கொடுக்கும். இதனால் பூனைக்கு உண்டான அசீரணம் – கண் நோய் – உடல்வலி – மந்தம் ஆகியவை குணமாகி விடும். இதனாலேயே இதற்கு பூனை வணங்கி என்று பெயர்.

மிக எளிதில் எல்லா நிலங்களிலும் – சாலை ஓரங்களிலும் இச் செடி வளரும். குறுஞ் செடி வகையை சேர்ந்தது. மாற்றடுக்கில் இலைகளையும் – இலைக் காம்பு இடுக்கில் பூக்களையும் உடையது. கார்ப்பு சுவையும் – கசப்புச் சுவையும் – வெப்பத் தன்மையும் கொண்டது.

இலைச் சூரணத்தை பொடி போல் மூக்கில் நசியமிட தலைவலி நீங்கும். பளிங்கு சாம்பிராணியுடன் இலையை அறைத்து நெற்றியில் பற்று போட்டாலும் தலைவலி தீரும்.

குப்பை மேனி இலையுடன் மஞ்சள் பொடி கலந்து விஷ கடிகளுக்கும் – புண்களுக்கும் பூசினால் குணமடையும் இலையை சுண்டக்காய் அளவு அரைத்து உருட்டி ஆனவாயில் வைத்தால் பலநாள் மலக்கட்டு உடைந்து வெளியேறும்.

தேங்காய் எண்ணெய்யுடன் இலைச் சாற்றை கலந்து காய்ச்சி உடல் வலிக்குத் தடவினால் குணமாகும்.

சிறிதளவு இலையுடன் – பூண்டு அரைத்து பாலில் கொடுத்தால் குழந்தைகளின் வயிற்றில் தொந்தரவு செய்யும் புழுக்கள் வெளியேறும்.

படுத்த படுக்கையாகக் கிடப்பவர்களின் படுக்கைப் புண்களுக்கு (Bed Sores) இலைபொடி – சிறிது மஞ்சள் பொடி சேர்த்து புண்கள் மீது தூவி தேங்காய் எண்ணெய் தடவினால் புண்களில். உள்ள புழுக்கள் சாகும். விரைவில் புண்கள் ஆறிவிடும்.

வாந்தி உண்டு பண்ண – சிறியவர்களுக்கும் – பெரியவர்களுக்கும் இதன் இலைச்சாறு கொடுக்கலாம். வயிற்றிலுள்ள பூச்சிகள் – சளி வெளியேறும்

இலையை ஆமணக்கு விட்டு தாளித்து தினசரி காலையில் 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மூலம் – ஆசவாய் அரிப்பு குணமாகும். இலைப் பொடியுடன் சிறிது சீனி சேர்த்து பசும்பாலில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட எப்படிப்பட்ட மார்பு வலியும் நீந்கி விடும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

கொட்டைப் பாக்கு அளவு இதன் வேரை அரைத்து பசும்பாலில் கலந்து 3 நாட்கள் கொடுத்து உப்பு இல்லா பத்தியமாக இருந்தால் எலிக்கடி விஷம் நீங்கும்.

நல்லெண்ணெயில் இலைச் சாற்றை கலந்து காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் வலி தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!