சித்த மருத்துவம்

கருப்பை நீர்க்கட்டி குணமாக சிறந்த அனுபவ மருந்து

தற்பொழுது பெரும்பாலான பெண்களுக்கு கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு அதிகளவில் ஏற்படுகிறது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சினையை மிக சுலபமாக சரி செய்யலாம்.

தேவையான மூலிகைகள்

  • கருஞ்சீரகம் – 100 கிராம்
  • கழற்சிக்காய் – 200 கிராம்
  • எள்ளு – 100 கிராம்
  • மிளகு – 50 கிராம்

செய்முறை

கழற்சிக்காயை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு மிளகை புளித்த மோரில் போட்டு இரவு ஊறவைத்து எடுத்து பிறகு காயவைத்து, அதனுடன் கருஞ்சீரகம், எள்ளை வறுத்து பொடியாக்கி அதனுடன் கழற்சிக்காய் பொடியை சேர்த்து சளித்து வைத்துக்கொள்ளவும்.

அளவு

3 முதல் 5 கிராம்

சாப்பிடும் முறை

காலை மற்றும் மாலை உணவுக்கு பின் வெந்நீரில் குடிக்கவும்.

பயன்கள்

  • கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும்.
  • வயிற்றிலுள்ள புழுக்களை கொள்ளும்.
  • உடல் எடையை குறைக்கும்.
  • அண்டவாயு குணமாகும்.
  • வயிற்று பெருமல், சூதக கட்டு, சூதக சூலை நீங்கும்.
  • விரை வீக்கம் குறையும்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 3 =

Back to top button
error: Content is protected !!
Close