சித்த மருத்துவம்தைலம்
மஞ்சள் கரிசலாங்கண்ணித் தைலம்
மஞ்சள் கரிசலாங்கண்ணித் தைலம் தீராத தலைவலி, கபால ரோகம், மண்டையிடி போன்ற நோய்களை குணமாக்குகிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணித் தைலம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1/2 லிட்டர்
- நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
- கொடிவேலிப்பட்டை – 10 கிராம்
- மஞ்சள் – 10 கிராம்
- காய்ந்த மிளகாய் – 10 கிராம்
- பொன்னாங்கண்ணி – 10 கிராம்
- கீழாநெல்லி – 10 கிராம்
செய்முறை
கொடிவேலிப்பட்டை, மஞ்சள், காய்ந்த மிளகாய், பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி இவை அனைத்தையும் நீர் விட்டு அரைத்து வடைபோல் அடை தட்டி வைத்து விட்டு சட்டியில் மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் இரண்டையும் ஊற்றி நீர் சுண்டக்காய்ச்சி அதில் செய்து வைத்துள்ள 10 அடைகளையும் போட்டு அடை சிவந்ததும் இறக்கி வைத்து ஆறியவுடன் வடிகட்டி அந்த எண்ணையை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
பயன்கள்
- தீராத தலைவலி, கபால ரோகம், மண்டையிடி தீரும்.
- முடிஉதிர்வை தடுக்கும்.