இன்றைய வாழ்க்கைமுறையில் நேரமின்மை என்பது ஒரு பெரிய பிரச்சினை அதனால் நாம் உண்ணும் உணவுமுறையினால் நம் உடலின் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. நம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள சில எளிய முறைகளை தெரிந்து கொண்டால் நோய்கள் வருவதற்குள் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். இயற்கை விளைபொருள்களை கொண்டு உடல் உறுப்புகளை பலப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.

மூளை

 • வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து சுடுசாதத்துடன் சாப்பிட மூளை சுறுசுறுப்படையும்.
 • கருவேப்பிலை துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடுகள் சீராக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.
 • தினசரி சிறிதளவு தேங்காய் துண்டுகளை மென்று தின்று வந்தால் மூளையில் புண்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இரத்தம்

 • விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து புத்துணர்ச்சி தரும்.
 • சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து 10 மணி நேரம் கழித்து அந்நீரை அந்நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
 • இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
 • வாரம் இருமுறை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

நரம்புகள்

 • கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும்.
 • சேப்பங்கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வர நரம்புகள் பலப்படும்.
 • இரண்டு அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வர நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
 • மாதுளம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்.

பற்கள்

 • செவ்வாழை பழத்தை தினமும் சாப்பிட்டு வர பற்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
 • கோவைப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வர பல் நோய்கள் வராது.
 • மாவிலையை பொடியாக்கி அதில் பல் துலக்கி வர பற்கள் உறுதி பெறும்.

கண்கள்

 • பொன்னாங்கண்ணி கீரை, முருங்கை கீரை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர கண்களுக்கு குளிர்ச்சியளிக்கும், கண்பார்வை மேம்படும்.
 • தினமும் இரண்டு பாதாம் பருப்பு சாப்பிட்டு வர கண்பார்வை திறன் அதிகரிக்கும்.
 • நெல்லிக்காய் சாறு அடிக்கடி அருந்தி வர கண்பார்வை மேம்படும்.

சருமம்

 • அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து சர்க்கரை கலந்து குடித்துவர உடல் உறுதிபெறுவதுடன் பொலிவான முகம், பளபளப்பான சருமத்தை பெறலாம்.
 • முட்டைகோஸ் சாற்றை முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மாறும்.
 • ஆவாரம்பூ டீயை குடித்து வர சருமம் பளபளப்பாகும். மேலும் தோல் சம்பந்தமான நோய்கள் வராது.
 • ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர சருமம் பளபளப்பாகும்.

நுரையீரல்

 • முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்று நோயை வராமல் தடுக்க முடியும்.
 • சுண்டக்காய் வற்றலை அடிக்கடி சாப்பிட்டு வர நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
 • நுரையீரல் பிரச்சினை வராமல் தடுக்க முள்ளங்கி சாற்றை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இதயம்

 • உலர்திராட்சை சாப்பிட்டு வர இதயம் பலம் பெறும்.
 • ரோசாப்பூ, பனகற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியமாக கலந்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.
 • கரிசலாங்கண்ணி கீரை இதயத்தை பலப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
 • நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.

வயிறு

 • இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு சிறிதளவு தயிரை குடிக்க வயிறு சுத்தமாகும்.
 • மாதுளம் பூ தேனீரை குடித்து வர வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
 • வாரம் ஒருமுறை தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட வயிறு சம்பந்தமான நோய்கள் வராது.
 • மணத்தக்காளி கீரையை ரசமாக வைத்து சாப்பிட வயிறு கோளாறுகள் நீங்கும்.
 • சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை குறையும்.

கணையம்

 • கணையத்தின் செயல்பாடு சீராக இருக்க அவரைக்காய், நாவல்பழம் சாப்பிட்டு வரலாம்.
 • ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட கணையத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
 • கோவைப்பழம் கணையத்திற்கு நல்லது.

பாதம்

 • பாதவெடிப்புக்கு கண்டங்கத்தரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவி வர பாதவெடிப்பு சரியாகும்.
 • தேங்காய் எண்ணையுடன் விளக்கெண்ணெய் சம அளவு கலந்து பாதத்தில் தடவி வர பாதம் மிருதுவாக இருக்கும்.
 • வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்துண்ண கை, கால்களில் ஏற்படும் எரிச்சல் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + twelve =