மூலிகைகள்

சுவையின்மை, சரும நோய்களுக்கு மருந்தாகும் கோவைக்காய்

கோவைக்காய் நீண்ட முட்டை வடிவ வரிவுள்ள காய்களையும், செந்நிற பழங்களையும் , வெள்ளைநிற மலர்களையும், 5 கோணங்களுடைய மடலான காம்புடைய இலைகளையும் உடைய கொடி இனம். இதன் வேர் கிழங்காக வளரும், இதன் காய், இலை, கிழங்கு ஆகியவை மருத்துவ பயனுடையது.

வாயி னரோசகம்போ மாறா வழலையறு
நோயின் கபமகலு நுண்ணிடையே – தூயவதன்
வற்றற் கருசி மருவுகரப் பான்போகுஞ்
சுத்தக்கோ வைக்காயைச் சொல்.

மருத்துவ பயன்கள்

  • கோவைக்காயை வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால் அரோசகம் (உணவின் மீது வெறுப்பு), அஜீரண கோளாறு, சுவையின்மை ஆகியவை தீரும்.
  • கோவைக்காயை புளி சேர்க்காமல் பொரியல் அல்லது குழம்பு செய்து சாப்பிட்டால் சுரத்தையும், கப உபரியையும் நீக்கும்.
  • ஒரு பிடி கோவைக்காய் இலையை 100 மி.லி நீரில் சிதைத்து போட்டு 50 மி.லி யாக காய்ச்சி காலை, மாலை குடித்து வர உடல் சூடு, இருமல், நீரடைப்பு, சொறி சிரங்கு, கண்ணெரிச்சல் ஆகியவை தீரும்.
  • தினமும் ஒரு கோவைக்காயை சாப்பிட்டு வர மதுமேகத்தை தடுக்கலாம், மேலும் இது சரும நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
  • கோவைக்கிழங்கு சாறு 10 மி.லி காலை மட்டும் குடித்துவர இரைப்பிருமல் ( ஆஸ்துமா ), இரைப்பு. கபரோகம், மார்புச்சளி, கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
  • கோவைக்காயை பச்சையாக மென்று தின்றால் நாவில் உள்ள புண்கள் ஆறும்.
  • கோவைஇலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வர சருமநோய்கள் அனைத்தும் தீரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!