பழங்களின் நன்மைகளை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை எல்லா பழங்களுமே சத்து மிகுந்தவை. அதிலும் ஆரஞ்சு பழத்தின் சத்துக்கள் உடலிற்கு பல அற்புதங்களை தருகின்றன. ஆரஞ்சு பழம் அழகை கூட்டுவதிலும் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஆரஞ்சு தோல் மற்றும் பழம் இரண்டுமே அழகை தருகிறது.

கூந்தல் மற்றும் சருமம் இரண்டிற்குமே பயன்படுத்தலாம். சுருக்கம், பொடுகு என பல பிரச்சனைகளை போக்கி அழகை கூட்டுகிறது.

  • ஆரஞ்சு ஜுஸை வெள்ளை துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர கண்கள் பளிச்சென்றாகி விடும். கண்களில் ஏற்பட்டு சோர்வை நீக்கி பிரகாசமாகவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
  • ஆரஞ்சு பழ தோலை அரைத்து அதன் விழித்து கால் டீஸ்பூன், கசகசா விழுது 1 டீஸ்பூன், சந்தனம் 2 சிட்டிகை இவற்றை கெட்டியாக பேஸ்ட் செய்து தினமும் இரவு தூங்கப்போகும்போது பருக்கள் வந்த இடத்தில் பூசி காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இதனால் வடு மறைவதுடன் பருக்களும் உங்கள் முகத்தை எட்டி பார்க்காது.
  • வேப்பங் கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்துரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து கருமை படர்ந்த இடத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
  • உலர்ந்த ஆரஞ்சு தோல், வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்துவர முடி பளபளப்பாகும்.
  • ஆரஞ்சு தோல் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்கு பேக் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை செய்த்து வந்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + eleven =