இரத்த அழுத்தம் ஒரு அபாயமான நோயாகும். வாழ்க்கையை திடீரென முடக்கிப்போட்டு விடும். ஆகவே அக்கறையாக இருந்து சரி செய்து கொள்ள வேண்டும். இரத்த ஓட்டம் என்பது கெட்டியா இல்லாமல் லேசாக சலசலவென ஓட வேண்டும். இதற்கு ஒரே வழி இயற்கை மருத்துவம்தான்.

உணவு பழக்கம்

உணவு அழுத்தமும், உப்பு அழுத்தமும் அதிகமாவது தான் இந்த நோய்க்கு காரணம். இந்த இரண்டையும் குறைப்பது நல்லது.

வாழைத்தண்டுச் சாறு, அருகம்புல் சாறு, எலுமிச்சை ஜூஸ், சுக்கு மல்லி சீரக காபி தினசரி குடிக்க வேண்டும்.
சாறுள்ள பழங்களை முக்கிய உணவாகச் சாப்பிட வேண்டும். மற்ற வகை ஆகாரங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சாறுள்ள பழங்கள் என்றால் திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை ஆகியவற்றை மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.

எளியமுறை கை, கால் அசைவுப் பயிற்சிகளை காலையும், மாலையும் செய்து எல்லா உறுப்புகளையும் தினமும் இயங்கவைக்க வேண்டும்.

தூக்கம் என்பது மிக முக்கியம். எக்காரணம் கொண்டும் தூக்கத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
தண்ணீரில் எலுமிச்சம் பழம் பிழிந்து தினமும் நான்கு முறை குடித்தால் சுறுசுறுப்பாக இருக்கும்.

தினமும் இரண்டுமுறை சீரக கஷாயம் குடித்தால் நச்சு வாயுக்கள் நீங்கி நன்றாக இருக்கும். காலையும், மாலையும் நடைப்பயிற்சி செய்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.

பால், முட்டை, மாமிசம் உட்பட எந்த அசைவ உணவைச் சேர்த்தாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 11 =