அரைகிலோ அறுகம் வேரை. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து அரை லிட்டர் நல்லெண்ணெய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு வகைக்கு 10 கிராம் பால் விட்டு நன்றாக அரைத்து கலக்கி சிறு தீயில் பதமுற காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும் இதுவே அறுகுத்தைலம்.

உபயோகிக்கும் முறை

ஒரு நாள் விட்டு ஒருநாள் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வரவும்.

பயன்கள்

தலைவெப்பம், நீர்க்கடுப்பு, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, நெஞ்சுவலி, மூலச்சூடு, வாதம், பித்தம் ஆகிய நோய்கள் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + ten =