மூலிகைகள்

நீர் சுறுக்கு, நீர்க்கட்டு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரிவிதை

விதை - நீர் சுறுக்கு, நீர்க்கட்டு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரிவிதை

நீர் சுறுக்கு, நீர்க்கட்டு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரிவிதை
பல்வேறு சத்துக்களை அடக்கிய விதைகளை சில நேரங்களில் வீணடிக்கிறோம். அதில் ஒன்றுதான் வெள்ளரி விதை, காரணம் அதன் மருத்துவ பயன்களை நாம் அறியாததால் தான். வெள்ளரி விதையும் பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பை போன்று மருத்துவ குணங்களை கொண்டதேயாகும்.

கடுப்பொடு நீர்க் கட்டுவெறுங் கல்லடைப்பு தாரை
வெடிப்பு சதையடைப்பு மேக – மெடுத்துரைக்கா
வுள்ளரிவி யென்னு முறைதிரிச்ச ரம்மிவைகள்
வெள்ளரிவி தைக்கேகும் விள்

குணம்

வெள்ளரிவிதைக்கு கடுகின்ற நீரடைப்பு, நீர்த்துவார வெடிப்பு, சதையடைப்பு, பிரமேகம் இவைகள் நீங்கும் என்க.

பயன்கள்

  • இதன் மேல்தோலை நீக்கி 6 கிராம் அளவு எடுத்து பால் விட்டு மெழுகு பதத்தில் அரைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் காலை மாலை இருவேளை சாப்பிட நீரடைப்பு, நீர்த்துவார வெடிப்பு, சதையடைப்பு இவைகள் நீங்கும் .
  • வாதுமை பருப்பு, வெள்ளரிவித்தின் பருப்பு, கசகசா, கோதுமை நொய் இவைகளை சமனெடையாக பசும் பால் விட்டு அரைத்து கஞ்சி போல் காய்ச்சி சிறிது கற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிட உடலில் உள்ள அழலையை அகற்றுவதுடன் நீர் சுறுக்கு, நீர்க்கட்டு, கல்லடைப்பு, வெட்டை முதலியவை நீங்கும்.
  • வெள்ளரி விதை சரும வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Leave a Comment

five × 4 =

error: Content is protected !!