மூலிகைகள்
குளிர்ச்சி தரும் வெட்டிவேர்
வெட்டிவேர் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு மூலிகையாகும். இது ஒரு கோரைப்புல் வகையை சேர்ந்த தாவரம் ஆகும். இந்தியாவை தாயகமாக கொண்ட மூலிகையாகும். இதை மண் அரிப்பை தடுக்க பயன்படுத்திவந்தார்கள். நறுமண எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டிவேரை கொண்டு காலணிகள், மாலைகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள் போன்ற பொருட்கள் செய்யப்படுகின்றன.
பித்தவி தாகஞ் சசிகா மிலங்கறைப் பித்தமனற்
றத்திடுக குட்டஞ் சிரநோய் களமடி தாதுநட்ட
மத்தம னற்புண்ட னப்புண் வன்மூர்ச்சை வரிவிழிநோய்
வித்திரமேகத்தின் கட்டியும் போம்வெட்டிவேரினுக்கே
குணம்
வெட்டிவேருக்குப் பித்தம், ரத்தபித்தம், காமாலை, தலை நோய், மூர்ச்சை, கழுத்து நோய், தீப்புண், விந்து நஷ்டம், முலை சிலந்தி, மேகக்கட்டி ஆகியவை நீங்கும் என்க.
பயன்கள்
- வெட்டிவேரை இடித்து சூரணமாக்கி வேளைக்கு 5 கிராம் அளவு சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் பித்தம், அதிக தாகம், அழலை, சுரம் ஆகியவை நீங்கும்.
- வெட்டிவேரை நன்றாக இடித்து தண்ணீர் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது வெல்லம் சேர்த்து ஒரு வேளைக்கு 1-2 அவுன்ஸ் சாப்பிட்டு வர விந்தணு குறைபாடுகள் நீங்கும்.
- தலைமுடி தைலம் தயாரிக்கும் போது வெட்டிவேரையும் சேர்த்துக்கொண்டால் நல்ல நறுமணம் கிடைக்கும். இதை தேய்க்கும் போது மனதிற்கு நல்ல அமைதி உண்டாகும்.
- வெட்டிவேர் பானத்தை பருகினால் உடல் சோர்வு, நீர்க்கடுப்பு, மன அழுத்தம் ஆகியவை நீக்கும்.
- வெட்டிவேரை மண்பானையில் போட்டு அந்த தண்ணீரை பருகும் போது தாகத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.
- வெட்டிவேரை ஜன்னல் திரையாக செய்து உபயோகிப்பதும் உண்டு இது கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.