மூலிகைகள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் விலாமிச்சு வேர்

விலாமிச்சு வேரானது வெட்டிவேரைப்போலவே சன்னமாகவும் கூந்தலை போன்று அடர்த்தியாகவும் நீண்டு கருநிறமாக பூமியில் இறங்கி இருக்கும். விலாமிச்சு வேர் அதிக நறுமணமுடையது.

மேகம் விழியெரிச்சல் வீறிரத்த பித்தமொடு
தாகமத மூர்ச்சைபித்தஞ் சார்மயக்கஞ் – சோகஞ்
சிரநோ யிவையேகுஞ் செய்யவிலா மிச்சுக்
கெரிசுரமு மின்றென றிசை

குணம்

விளாமிச்சினால் மேக நீர், கண் எரிச்சல், உதிர பித்தம், தாகம், தெளிவற்ற மனநிலை, மயக்கம், தலைவலி, தீச்சுரம் இவைகள் போம் என்க

பயன்கள்

  • விலாமிச்சு வேரை முடித்தைலங்களில் சேர்க்க அதிக வாசனையை கொடுப்பதுடன் கண், கை, கால் முதலிய இடங்களில் உள்ள எரிச்சலை சாந்தப்படுத்தும்.
  • விலாமிச்சு வேரை பித்த கியாழங்களில் சேர்த்து கொடுக்க தாகம், கண் எரிச்சல், உதிர பித்தம், தாகம், தெளிவற்ற மனநிலை, மயக்கம், தலைவலி, தீச்சுரம் முதலியவற்றை குணமாக்கும்.
  • விலாமிச்சு வேர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது அதனால் இதை காய்ச்சலுக்கு கொடுக்கும் நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!