வியர்வை என்பது நல்ல விசயமாக இருந்தாலும் சிலருக்கு அதிகமாக வியர்க்கும்போது சில துர்நாற்றமும் சேர்ந்து வருவதால் அவர்களுக்கு அருகில் கூட போகமுடியாத நிலை ஏற்படுகிறது. இது போன்று இருப்பவர்களுக்கு வாசனை திரவியங்கள் ஏராளமாக இருந்தாலும் அள்வுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது தோல்களுக்கு மேலும் சில பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.

இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம்.

  • சந்தனத்தை பன்னீருடன் கலந்து உடலில் பூசி ஊறவைத்து இளம் வெந்நீரில் குளிக்க வியர்வை நாற்றம் நீங்கும்.
  • ஆவாரம்பூவை உலர்த்தி சமனளவு பயித்தமாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் அகலும்.
  • மருதாணி இலை 100 கிராம், மருதாணி பூ 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம் மூன்றையும் நன்றாக அரைத்து எலுமிச்சை சாற்றில் கலந்து பூசி குளிக்க வேர்வை நாற்றம் அகலும்.
  • ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல், ரோஜா இதழ்கள், மகிழம்பூ, வெட்டிவேர் இவைகளை சமனளவு எடுத்து நன்றாக உலர்த்தி தூள் செய்து உடலில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளிக்க உடலில் நறுமணம் கமழும்.
  • நம் முன்னோர்கள் கூறியவாறு இயற்கை குளியல் பொடி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்திவரலாம் இதனால் உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் நலனை கொடுக்கும்.
  • இயற்கை குளியல் பொடி செய்முறை வீடியோ https://www.siddhamaruthuvam.in/குளியல்-பொடி-செய்முறை.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + seven =