உணவே மருந்து

கருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை

வாழைப்பூ பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. குறிப்பாக கருப்பை கோளாறுகளை குணமாக்குகிறது. வாழைப்பூவை வடையாக செய்து சாப்பிட கருப்பை சம்பந்தமான கோளாறுகளை குணமாக்குகிறது.

தேவையானவை

  • வாழைப்பூ – 1 சிறியது
  • கடலைப்பருப்பு – 100 கிராம்
  • வெங்காயம் – 1 பெரியது
  • பச்சை மிளகாய் – 3
  • சீரகம்
  • கொத்தமல்லி
  • கருவேப்பிலை
  • உப்பு

செய்முறை

கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவேண்டும். வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஊறவைத்த பருப்பை அரைத்து அதனுடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை , உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

பயன்கள்

  • பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
  • ஆண்மை குறைவு நீங்கி விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
  • உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும்.
  • பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, அசதி ஆகியவை நீங்கும்.

வீடியோ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!