உணவே மருந்து

கருப்பை கோளாறு, ஆண்மை குறைவு நீக்கும் வாழைப்பூ பொரியல்

பொரியல் - கருப்பை கோளாறு, ஆண்மை குறைவு நீக்கும் வாழைப்பூ பொரியல்

தேவையானவை

 • வாழைப்பூ – 1
 • தேங்காய் துருவியது – 1 கப்
 • பச்சை மிளகாய் – 2
 • பாசிப்பருப்பு – சிறிதளவு
 • வெங்காயம் – 1 பெரியது
 • மஞ்சள் தூள்
 • நல்லெண்ணெய்
 • கடுகு
 • கறிவேப்பிலை

செய்முறை

வாழைப்பூ இதழ்களில் உள்ள நரம்புகளை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பிறகு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பிறகு வாழைப்பூ சேர்த்து நன்றாக வேகவைக்கவேண்டும். பிறகு உப்பு சேர்த்து கிளறி தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கவும்.

பயன்கள்

 • பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு நீங்கும்.
 • ஆண்மை குறைவு நீங்கி சுக்கில விருத்தி அடையும்.
 • பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • உடல் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாகும்.
 • மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, அசதி ஆகியவை நீங்கும்.

வீடியோ

Leave a Comment

five × 3 =

error: Content is protected !!