உணவே மருந்து

கல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்

vazhaithandu soup - கல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்

தேவையானவை

 • வாழைத்தண்டு – 200 கிராம்
 • சீரகத்தூள் -2 தேக்கரண்டி
 • மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • உப்பு- தேவையான அளவு
 • கான் பிளவர் – 2 தேக்கரண்டி

செய்முறை

வாழைத்தண்டினை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாழைத்தண்டுகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கான் பிளவர் மாவை சிறிது நீரில் கலக்கி சூப்பில் சேர்க்கவும். சிறிது வேகவைத்த வாழைத்தண்டுகளை சேர்த்து இறக்கவும்.

பயன்கள்

 • சிறுநீர் பாதையில் உள்ள கல் அடைப்பை குணமாக்குகிறது.
 • உடல் பருமனை குறைக்கும்.
 • உடலில் உள்ள தேவையற்றை கொழுப்பை குறைக்கிறது.
 • வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.
 • நீர்கட்டிகளை குணமாக்குகிறது.

வீடியோ

Leave a Comment

five − 3 =

error: Content is protected !!