உணவே மருந்து
வல்லாரை துவையல்
செய்முறை
வல்லாரை இலையை நன்கு சுத்தப்படுத்தி இலைகளை நன்கு நீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இலையோடு சிறிது இஞ்சி, சிறிது பூண்டு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சையாகவே துவையல் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
காலை மற்றும் மதிய உணவுகளில் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.
மருத்துவ பயன்கள்
- குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
- வாத நோயாளிகளுக்கு கண்டிப்பாக சேர்க்கவேண்டிய உணவு.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது.
- மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு வேளையாவது சாப்பிட வேண்டும்.
- இரத்த ஓட்டத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது.