வயிற்றுப்புண் குணமாக கசாயம் தயாரிக்கும் முறை
வயிற்றுப்புண் அல்லது குடற்புண் பலவித தொந்தரவை கொடுக்கக்கூடியது. இது பெரும்பாலும் மாற்று உணவுகளை வெவ்வேறு ஊர்களில் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது. இது மலச்சிக்கல் காரணமாகவும் தோன்றக்கூடியது.
மலச்சிக்கல் தோன்ற காரணம் மலத்தை அடக்குதல், அதிக அளவு உணவு உண்ணுதல். மலச்சிக்கலால் குடல்பகுதியில் புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதுபோன்று வயிற்றுப்புண்ணால் அவதிக்குள்ளானவர்கள் மூலிகை கசாயம் தயாரித்து (48 நாட்கள்) ஒரு மண்டலம் அருந்தி படிப்படியாக குணமடையலாம்.
வயிற்றுப்புண் குணமாக கசாயம் தயாரிக்கும் முறை
அத்தி இலை – 25 கிராம், முற்றிய வேப்பிலை – 25 கிராம் இவற்றை ஒரு 400 மிலி தண்ணீர்விட்டு100 மிலி யாக காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
வயிற்றுப்புண் குணமாக கார உணவுகளை நீக்கி விட வேண்டும். இரவு உணவுக்கு பதிலாக பசும் பால் காய்ச்சி பனை வெல்லம் சேர்த்து குடித்து வரவேண்டும் ஒரு மாத காலத்துக்கு பின் சிறிது சிறிதாக காரம் மற்றும் எல்லா சுவை உணவினையும் உண்ணும் நிலை ஏற்பட்டுவிடும்.