மனிதன் இயற்கையை விட்டு செயற்கைகளுக்கு மாறினான் . இயற்கை விட்டு செயற்கைக்கு மாறும்போது பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் நோய் எதிப்பு சக்தி குறைந்து அதிக நோய் தாக்குதலுக்கு உண்டாகிறோம் எனவே இதுபோன்ற மூலிகைகள் அவ்வப்போது நாம் உணவில் செய்துக்கொள்வது மிகவும் நல்லது. நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க மூலிகை சூப் மிகவும் அவசியமானது. மூலிகை சூப் வீட்டில் தயாரித்து அனைவரும் சாப்பிடலாம்.

தேவையான மூலிகைகள் மற்றும் பொருட்கள்

  • முடக்கற்றான் ஒரு கைப்பிடி சுத்தம்செய்தது
  • முருங்கை கீரை ஒரு கைப்பிடி சுத்தம் செய்தது
  • வாதமடக்கி கைப்பிடி சுத்தம் செய்தது
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • மல்லித்தழை சிறிது
  • தக்காளி 100 கிராம்
  • சின்னவெங்காயம்100 கிராம்
  • மிளகு 5 கிராம்
  • சீரகப்பொடி 5 கிராம்

இவைகளை 1 லிட்டர் தண்ணீரில் மண்பானையில் நன்கு கொதிக்க தேவையான அளவு உப்பு சேர்த்து நல்ல வாசனை வந்த உடன் வடிகட்டி விடவேண்டும்.

பிறகு பிராமனையில் பானையை இறக்கி வைத்து கொட்டாஞ்சி அகப்பையில் மண் கப்பில் ஊற்றி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். (இதை சிறிய அளவிலும் தாங்கள் வசதிக்கேற்ற பாத்திரத்திலும் செய்து சாப்பிடலாம்) இதுபோல் தயாரிக்கும் மூலிகை சூப்பை வீட்டில் சிறிது அளவில் தயாரித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிடுவதால் உடல் நலத்தை பாதுகாக்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =