மூலிகைகள்
தோல்நோய்கள் அனைத்திற்கும் ஒரே மூலிகை மூக்கிரட்டை
ஒருபுறம் வெளுத்த நீள் வட்ட இலைகளையும் செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. மூக்குறட்டை, சட்டரனை, மூக்கரைச்சாரணை என்ற பெயர்களாலும் குறிப்பிடப் பெறுகிறது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. வேர் மலமிளக்கும் சிறுநீர் பெருக்கும்.
சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும்
வாத வினையை மாடிக்குங்காண்-பேதி
கொடுக்குமதை யுண்டக்காற் கோமளமே! பித்த
மடுக்குமே மூக்குறட்டை யாய்.
மருத்துவ பயன்கள்
- மூக்கிரட்டை வேர் கிழங்குடன், மருதாணி, கற்றாழை, ஆவாரம் பூ சேர்த்து நல்லெண்ணையில் காய்ச்சி தேய்த்து வர தோலில் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களும் தீரும்.
- ஒரு பிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல்வாதம், ஆஸ்துமா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.
- இலையைப் பொரியல், துவையலாக வரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- வேரை உலர்த்தி பொடித்து காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட மாலைக்கண், கண் படலம், மங்கலான பார்வை ஆகிய நோய்கள் குணமாகும்.
- இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர உடல் பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
- வேர் 1 பிடி, அருகம்புல் 1 பிடி, கீழாநெல்லி 1 பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி தினமும் 2 வேளை சாப்பிட்டுவர காமாலை, நீரேற்றம், வீக்கம், நீர் கட்டு, மகோதரம் ஆகியவை தீரும்.
Tholnoi kunamadaiya
மூக்கிரட்டை வேர்கிழங்கு, சோற்றுக்கற்றாழை, ஆவாரம்பூ, மருதாணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து பிறகு நல்லெண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு இதை உடலில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து மிதமான சுடு நீரில் குளித்து வர அரிப்பு மற்றும் தோல்நோய்கள் அனைத்தும் தீரும்.