உணவே மருந்து மூலிகைகள்

முறுக்கேற்றும் முருங்கையின் மருத்துவ பயன்கள்

முருங்கை கீரை, முருங்கை விதை, முருங்கை காய்
முருங்கையின் மருத்துவ குணங்கள்

முருங்கையின் ஆங்கிலப் பெயர் “moringa pterygosperma” என்பதாகும்.

சோபாஞ்சனம் – இரஞ்சனம் – இழவி – சிக்குரு என்ற பெயர்களிலும் முருங்கை அழைக்கப் படுகிறது. தவசு முருங்கை – கொடி முருங்கை – செடி முருங்கை – காட்டு முருங்கை என்று பல வகைகள் உள்ளன்.

முருங்கைக் கீரை சில மரங்கள் கிடைப்பது கசப்பு சுவை உடையதாகவும் – சில துவர்ப்பு சுவையையும் – சில இனிப்பு சுவையையும் உடையதாக இருக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்டது. இலையை நன்றாக அரைத்து வீக்கங்களுககு பற்று போட்டால் வீக்கம் வடியும். இலைச் சாறுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து நெற்றில் பற்று போட தலைவலி காணாமல் போகும். கண் நோய்களுக்கு இலைச்சாறு விட்டால் குணமாகும்.

முருங்கை இலையில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் இரத்த சோகை – பெண்களுக்கு உண்டாகும் உதிர போக்கு ஆகியவற்றை குணமாக்குகிறது. தாய்ப்பாலை ஊற வைக்கும். நீர் கடுப்பு – நீர் சுருக்கு – தோல் நோய் களையும் போக்குகிறது.

இதன் இலைச் சாறுடன் எலுமிச்சம் சாறு கலந்து முகப் பருக்களுக்கு தடவினால் பருக்கள் மறைந்து விடும். பூண்டு – உப்பு – மிளகு – சிறிது மஞ்சள் ஆகியவற்றோடு இக் கீரையையும் சேர்த்து அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் வெறிநாய் கடி விஷம் முறியும். கடி வாயிலும் பூச வேண்டும். முருங்கைக் கீரையுடன் நெய் சேர்த்து (புளியை நீக்க வேண்டும்) காலையில் மட்டும் 1 மண்டலம் சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகும்.

இலைச் சாறுடன் சிறிது சுண்ணாம்பு – தேன் கலந்து தொண்டைக் குழியில் பூசினால் இருமல் – குரல் கம்மல் தீரும்.

முருங்கைப்பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை – மாலை சாப்பிட்டு வந்தால் நினை வாற்றல் அதிகமாகும். நீரிழிவு குணமாகும். உடல் வலுவடையும் – நரம்புகள் புத்துணர்வு பெறும். ஆண்மை உண்டாகும்.

இதன் காயை சிறு துண்டுகளாக துவரம் பருப்புடன் சாம்பாரில் அல்லது ஆட்டு மாமிசத்தில் போட்டு சமைத்து சாப்பிட்டால் குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். வாயுவை நீக்கும். விந்துவை கட்டும். சளியை ஒழிக்கும்.

இதன் பிசின் தாது விருத்தி லேகியங்களில் சேர்க்க பயன்படுகிறது. பசும் பாலில் இதன் பிசினை (இடித்து தூள் செய்து) போட்டு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். அதிமூத்திரம் (நீரிழிவு) நிற்கும். முகம் பொலிவு பெரும்.

இதனுடைய வேர் – பட்டை – உலோகச் சத்துக்கள் நிறைந்துள்ளது. வேர் சிறிதளவு எடுத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிட்டால் முதுகுவலி – விக்கல் – இழைப்பு குணமாகும்.

விதையிலிருந்து பயோ பீசல் மற்றும் சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்விதையின் எண்ணெயுடன் சம அளவு கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு தடவினால் மூட்டு வலி குணமாகிறது.

Leave a Comment

8 − seven =

error: Content is protected !!