உணவே மருந்து

முருங்கை கீரை பொரியல்

கீரை பொரியல் - முருங்கை கீரை பொரியல்

தேவையானவை

 • முருங்கை கீரை – 1 கட்டு
 • அரிசி – 25 கிராம்
 • பூண்டு – 1
 • சின்ன வெங்காயம் – 10
 • மஞ்சள் தூள் – சிறிதளவு
 • மிளகாய் தூள் – சிறிதளவு

செய்முறை

முருங்கை கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அரிசியை வறுத்து எடுத்து பொடியாக்கிக்கொள்ளவும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு மண்சட்டியில் தண்ணீர் ஊற்றி சூடேறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு முருங்கை கீரையை போட்டு நன்றாக கிளறவும். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு வெங்காயம், போன்று சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பிறகு அரிசிப்பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்.

பயன்கள்

 • முருகைக்கீரையில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் இரத்தசோகை நீங்கும்.
 • தாய்ப்பாலை அதிகமாக சுரக்கவைக்கும்.
 • தோல் நோய்களை நீக்கும்.
 • நீர்க்கடுப்பு, நீர் சுருக்கு ஆகியவை குணமாகும்.
 • உடல் வலுவடையும் ஆண்மை அதிகரிக்கும்.

வீடியோ

Leave a Comment

17 − 13 =

error: Content is protected !!