உடல் நலம்

முதுகு வலி குணமாக

முதுகு வலி குணமாக

முதுகு வலி வருவதற்கு முக்கிய காரணம் நேராக நிமிர்ந்து உட்காராமல் இருப்பதே ஆகும். அலுவலங்களில் ஒரே இடத்தில் இருந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி அதிகமாக இருக்கும், நீண்ட தூரம் பஸ், கார், பைக் போன்றவற்றில் பயணிப்பவர்களுக்கு முதுகு வலி அதிகம் ஏற்படுகிறது.

முதுகு வலி உள்ளவர்கள் தலைக்கு உயரமான தலையணையை பயன்படுத்தக்கூடாது. முடிந்த வரை தலையணை இல்லாமல் படுப்பது நல்லது. தரையில் விரிப்பை பயன்படுத்தி முதுகை தரையில் படுமாறு மல்லாந்து படுத்து தூங்குவது நல்லது.

உட்காரும்போது நிமிர்ந்து உட்கார வேண்டும். நாம் நிமிர்ந்து நிற்கும் போது நம்முடைய தண்டு வடத்தில் இயற்கையாக மூன்று வளைவுகள் இருக்கும். இந்த வளைவுகளைப் பராமரிப்பது அடிவயிறு கழுத்து பின்புறமுள்ள கெட்டியான தசைகள் தான். எப்போது சரியான நிலை கிடைக்கிறது என்றால் இந்த மூன்று வலையுகளும் மிகக் சரியாக பராமரிக்கப்படும் போதே.

இதற்கு சித்த வைத்திய முறையை பின் பற்றினால் இந்த முதுகு வலியில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.

அமுக்கிராவை சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி பாலில் கலக்கி காலை மாலை இரண்டு வேலை சாப்பிடலாம்.

அதிமதுரம், சுக்கு, மிளகு, மூன்றையும் சமமாக எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் கலக்கி காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வரலாம்.

ஓமம் 10 கிராம், மிளகு 10 கிராம், சுக்கு 10 கிராம், ஏலம் 20 கிராம் எடுத்து லேசாக வறுத்து எடுத்து பொடியாக செய்து (சூரணம்) அதனுடன் சம எடை கற்கண்டு சேர்த்து தினசரி இரண்டு வேலை வெந்நீரில் சாப்பிடலாம். இது வயிற்று வலியையும் குணமாக்கும்.

முடக்கத்தான் ஒரு பிடி அளவு எடுத்து இடித்து அதனுடன் 200 மிலி தண்ணீர் கலந்து 100 மிலி அளவாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேலை சாப்பிடலாம்.

Leave a Comment

3 + 6 =

error: Content is protected !!