நல்ல ஆரோக்கியமான கேசம் என்பது கருமையாகவும் பளபளப்பாகவும் சீபம் என்ற இயற்கை எண்ணெய் பூசப்பட்டதாகவும் இருக்கும். தோலிலுள்ள என்னைசுரப்பியால் சுரக்கப்படுவதுதான் சீபம் என்னும் பொருள். இந்த சீபம் சரியாக சுரக்காததாலும் தலைமுடிக்கு சரியான எண்ணெய் தடவாததாலும் முடி வறட்சி உண்டாக்குகிறது. அதன் நுனி பிளவு பட்டு காணப்படும்.

முடிவரட்சியை வாரம் 2 முறையாவது மூலிகைகள் கலந்த சிகைகையை பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம். மேலும் சில வழிமுறைகளை பின்பற்றி முடி வறட்சியை முழுவதுமாக போக்கலாம்.

முடிவறட்சியை போக்கும் வழிமுறைகள்

  • முடி வறட்சிக்கு முட்டையிலுள்ள மஞ்சள் கருவை தேய்த்து 15 நிமிடங்கள் உலர வைத்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கும்.
  • எலுமிச்சை சாற்றில் ‘வினிகர்’ என்று அழைக்கப்படும் ‘காடி’ கலந்து கூந்தலுக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வறட்சி நீங்கி நல்ல பளபளப்பையும் தரும்.
  • சிறிதளவு சிகைக்காய் எடுத்து இருமடங்கு தண்ணீர் விட்டு கரைத்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு ஆறவைத்து கூந்தலுக்கு தேய்த்து குளித்து வர முடிவறட்சி நீங்கும்.
  • ஒரு கோப்பையில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி லேசாக சூடாக்கி விரல் நுனிகளில் தொட்டு மயிர் கால்களில் லேசாக அழுத்தி தேய்க்கவும். பின்பு ஒரு டவலை வெந்நீரில் நனைத்து தலையை சுற்றி கட்டவும். பின்பு குளிர்ந்ததும் மீண்டும் இது போல் 3 முறை செய்த பின் குளிக்கவும். இது போல் அவ்வப்போது செய்து வர முடி வறட்சி அகலும்.

உணவு முறைகள்

மீன், முட்டை, பால், நெய், வெண்ணெய், பாதம் பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் நிறைத்த காய்கள், பழங்கள் தொடர்ந்து சாப்பிட முடிவறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை சிகைக்காய் வாங்க http://naturekart.in/product/sikaikai-powder/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − ten =