மூலிகைகள்

ஆஸ்துமாவை (இரைப்பிருமல்) போக்கும் முசுமுசுக்கை

.jpg - ஆஸ்துமாவை (இரைப்பிருமல்) போக்கும்  முசுமுசுக்கை

சுணை உடைய இலைகளையும் சிவப்பு நிற பழங்களையும் உடைய பற்றுக் கம்பிகள் உள்ள ஏறுகொடி. தமிழகமெங்கும் வேலிகளில் தானே வளரக்கூடியது. இலை, வேர் மருத்துவ பயனுடையது.

இருமலுட னீளை இரைப்புப் புகைச்சன்
மருவுகின்ற நீர்தோஷ மாறுந் – திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி யவ்விலையைத்
தானே யருந்துவர்க்குத் தான்

குணம்

முசுமுசுக்கை இலை கோழையகற்றும் தன்மை உடையது. இதன் வேர் பசி உண்டாக்குதல், சளி அகற்றுதல், நஞ்சு நீக்குதல் ஆகிய குணங்களுடையது.

பயன்கள்

  • முசுமுசுக்கை இலைச்சாற்றை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர ஆஸ்துமா, கண் எரிச்சல், உடம்பு எரிச்சல் ஆகியவை தீரும்.
  • முசுமுசுக்கை இலைப்பொடி 100 கிராம், தூதுவேளை சூரணம் 75 கிராம் கலந்து அதனுடன் கருவேலம்பிசின் 1 அரிசி எடையளவு வெண்ணையில் கலந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கி, இரைப்பிருமல் ( ஆஸ்துமா), இரத்தகாசம், கபம் ஆகியவை தீரும். ஒரு மண்டலத்தில் சரியாகவில்லை எனில் தொடர்ந்து மேலும் ஒரு மண்டலம் சாப்பிட குணமாகும்.
  • முசுமுசுக்கை வேர் 100 கிராம், ஆடாதோடை வேர் 75 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை வகைக்கு 10 கிராம், லவங்கம் 2 கிராம் சேர்த்து இடித்து பொடி செய்து 5 அரிசி எடை கறுப்பு வெற்றிலையுடன் உட்க்கொண்டு பால் அருந்தி வர சுவாச உறுப்பை சுத்தமாக்கும். உறைந்த சளி வெளியாகும். நாட்பட்ட இருமல் என்புருக்கி தீரும்.
  • முசுமுசுக்கை இலையை 2 கைப்பிடி அளவு எடுத்து துவையல் செய்து சாப்பிட்டு வர காய்ச்சல், சளி சுரம், ருசியின்மை, இரத்தகாசம், இரைப்பிருமல் (ஆஸ்துமா), நீர்க்கோவை, மூக்குப்புண், வாசனையின்மை ஆகியவை தீரும்.

Leave a Comment

4 × 3 =

error: Content is protected !!