மூலிகைகள்
மிளகாய் மருத்துவ குணங்கள்
மிளகாய் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது இது ஒரு செடியினம். உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மூல நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. மிளகாய் வற்றல் மருத்துவ பயனுடையது.பசியை தூண்டவும் குடல் வாயு அகற்றவும் பயன்படும்.
பொன்னுக்கு வீங்கிப் புரட்டுங் குரல் துத்தி
பின்னு மிடுப்புவலி போர்ந்துபோம்-இன் னுங்கேள்
கச்சை யணிமாதே! கறிக்குதவும் வாய்வகற்றும்
பச்சை மிளகாயின் பண்பு.
குணம்
கறிக்குதவுகின்ற பச்சைமிளகாயால் பிட்டாலம்மை என்று கூறப்பட்ட சயித்தியமும், குரல்வளையில் காணும் துத்திரோகமும், இடுப்புவலியும், வாத உபரியும் நீங்கும் என்க.
பயன்கள்
- தேங்காய் எண்ணெயில் 5 மிளகாய் விதைகளை போட்டு காய்ச்சி சூடு ஆரியபிறகு காதில் விட காது வலி தீரும்.
- உணவு செரிமானம் வேகமாக நடைபெற பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பது நல்லது.
- பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை உடையது.
- மிளகாய் அளவிற்கு அதிகமாக உண்பதால் கண்களில் நீர்வடிதல், கண் சிவத்தல், இரைப்பை, குடல், வாய் புண்ணாகுதல், சீதக் கழிச்சல் ஏற்படுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
- தேள் கொட்டியவுடன் சிறிது மிளகாய் வற்றலை பொடி செய்து, அதை 2 வெற்றிலைகளில் வைத்து மடித்து நன்கு மென்று சாப்பிட நஞ்சு முறியும்.
- பச்சை மிளகாயில் அதிகளவு கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.