மூலிகைகள்

உடலுக்கு பலம் தரும் மாசிக்காய்

மருத்துவ பயன்கள் - உடலுக்கு பலம் தரும் மாசிக்காய்

மாசிக்காய் பூவிலிருந்து காய்க்கும் காய் அல்ல. இதன் மரத்தில் ஒரு வித பூச்சி துளைப்பதினால் அதில் இருந்து ஒரு வித சத்து வடிந்து உறைந்து திரண்டு கட்டுப்படுவதே மாசிக்காய் ஆகும். இது பல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் அதனால் இது மூலிகை பற்பொடிகளில் சேர்க்கப்படுகிறது.

அக்கரங்கள் போக்கிவிடு மாறாத வெப்பாற்று
மெய்க்குறுதி மாசிக்காய் மென்மேலுந் – தக்கதொரு
பாலர் கணச்சூடும் பன்மேக முந்தொலைக்கும்
வேலனைய கண்ணாய் விரி.

குணம்

மாசிக்காய் மாறாத உட்சூடு, சிசுக்களின் கணச்சூடு, பல மேகங்கள் இவைகள் நீங்கும் உடலுக்கு பலம் தரும்.

பயன்கள்

  • மாசிக்காயை வறுத்து பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து தேன் அல்லது நெய்யில் சாப்பிட பெரும்பாடு, நீர்த்தக் கழிச்சல், இரத்த கழிச்சல், மிக வியர்வை, பெண்குறியில் காணும் கசிவு ஆகியவை தீரும். உடலுக்கு பலத்தை தரும்.
  • மாசிக்காய் பொடியுடன் கோழிமுட்டையின் மஞ்சள் கருவை மசித்து உள்ளுக்கு கொடுக்க குடலில் உண்டான புண்களும், நாட்பட்ட பேதிகளும் குணமாகும்.
  • மாசிக்காயை நீர்விட்டு இழைத்து ஆசனவாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் ஆகியவை ஆறும்.
  • மாசிக்காய் தூளை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்க பல் நோய்கள் அனைத்தும் தீரும், ஈறு பலப்படும்.
  • மாசிக்காயை அரைத்து தேகத்திற்கு பூச நாற்றத்தை விலக்கி நல்ல நறுமணத்தை கொடுக்கும்.
  • மாசிக்காயை காடி விட்டு உரைத்து தேமல், படைகள் மீது தடவி வர நீங்கும்.

Leave a Comment

four × two =

error: Content is protected !!