மூலிகைகள்

மயிர் மாணிக்கம் மருத்துவ பயன்கள்

மயிர் மாணிக்கம் வீட்டுத்தோட்டங்களில் அழகிற்காக வளர்க்கப்படுகிறது. செடி கம்பி போன்றும் இதன் பூ சிவப்பு நிறத்திலும் காணப்படும். இது மேகவெட்டைக்கு சிறந்த மூலிகையாகும் மேலும் பொடுகை போக்கும் தன்மை கொண்டது.

மயிர்மாணிக் காத்தல் வளர்மேகம் போகுஞ்
செயிரான மேகவெட்டை தீருங் – கயரோகம்
மாவிரணம் போக்கவிதில் வில்லிரதம் சேர்த்தரைத்துக்
தாவியுண்பா ருண்டறிந்தோர் தாம்

குணம்

மயிர்மாணிக்கத்தால் ஒழுக்குமேகமும், வெள்ளையும், ஷயமும் நீங்கும் என்க.

பயன்கள்

  • இம்மூலிகை சிறிது மிளகுடன் சேர்த்து அரைத்து சிறு கொட்டைப்பாக்கு அளவு தினம் ஒரு வேலை 7 நாள் கொடுக்க வெள்ளை வெட்டை குணமாகும்.
  • மயிர்மாணிக்கத்தின் இலையை அரைத்து வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் வைத்துக்கட்ட விரைவில் குணமடையும்.
  • 10 கிராம் எடைகொண்ட வேருக்கு 100 மி லி அளவு தண்ணீரில் கொதிக்க காட்சி வடிகட்டி வேளைக்கு 1 அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுத்து வர மேகவாயு, வெள்ளை, மேககாங்கை தீரும்.
  • இதன் வேரை கைப்பிடி அளவு எடுத்து அதில் வேம்பாடம் பட்டை 5 கிராம் போட்டு நன்றாக அரைத்து 100 மிலி நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பதத்தில் வடித்து தலைக்கு பூசி வர பொடுகு நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker