மஞ்சளின் மகிமை
அகன்ற ஈட்டி வடிவ இலைகளையுடைய தண்டுகளில்லாத சிறு செடிகள். பளிச்சிடும் மஞ்சள் நிற நறுமணமுள்ள கிழங்குகளை உடையது. உலர்த்திப் பதப்படுத்தப் பட்ட கிழங்குகள் பலசரக்கு கடைகளில் கிடைக்கும். கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது.
பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
மன்னு புருஷ வசியமாம்-பின்னியெழும்
வாந்திபித்த தோஷமையம் வாதம்போந் தீபனமாங்
கூர்ந்தநறு மஞ்சடனக்கு.
குணம்
பசி மிகுத்தல், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றல், சரீர அழுகளைத் தவிர்த்தல், நாடி நடையை மிகுத்து உடலுக்கு வெப்பம் தருதல், தாது பலம் கொடுத்தல், வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைத்தல் ஆகிய குணங்களையுடையது. தலைவலி, சலதோஷம் ஆகியவை குணமாகும்.
மஞ்சளின் சில வகைகள்
- விரல் மஞ்சள்
- குண்டு மஞ்சள்
- கஸ்தூரி மஞ்சள்
- நாக மஞ்சள்
- குரங்கு மஞ்சள்
- பலா மஞ்சள்
- மர மஞ்சள்
- காட்டு மஞ்சள்
இது போன்ற பல வகைகள் இருந்தாலும் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது.
மஞ்சளின் மருத்துவ பயன்கள்
மஞ்சளை அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி தேவையில்லாத முடி நீங்கும்.
மஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டை நீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் குணமாகும்.
மஞ்சள், வேப்பிலை சமமாக அரைத்துப் பற்றுப் போட அம்மைக் கொப்பளம், புட்டாலம்மை, சேற்றுப்புண் முதலியவை தீரும்.
200 மி லி தண்ணீரில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்.
மஞ்சள் ஒரு துண்டு வசம்பு 1 துண்டு சிறிதளவு கற்பூரம், மருதோன்றி இலை 10 கிராம் ஆகியவற்றை அரைத்துக் கட்டி வர 10 நாட்களில் கால் ஆணி வலி குணமாகும்.
பிரமதண்டி இலை இரண்டுடன் கறி மஞ்சள் 1 துண்டு சேர்த்து அரைத்து மாதவிடாய் ஆனா நாள் முதல் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வர கரு தரிக்கும் வாய்ப்புண்டு.
10 கிராம் அளவு வெண்ணெயுடன் இரண்டு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குழைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வர பூரண குணமாகும்.
குப்பைமேனி, வேப்பந்தளிர், மஞ்சள் மூன்றையும் சேர்த்து மை போல அரைத்து தலையில் நன்றாக தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வர பொடுகு நிரந்தரமாக நீங்கும்.