மூலிகைகள்

உடல் உறுதிக்கு மக்காச்சோளம்

மக்காச்சோளம்

தானிய வகைகளில் ஒன்றான மக்காசோளம் உடலுக்கு மிகுந்த வலிமையை தருகின்ற உணவாகும். நடுத்தரமான மக்காச்சோளத்தை நெருப்பனலில் வாட்டி எடுத்து அல்லது தண்ணீரில் வேகவைத்து சாப்பிட அதிக ருசியாக இருக்கும். மக்காச்சோளத்தில் இருந்து எடுத்த மாவை சர்க்கரை கலந்து சத்துமாவாக உண்பதுண்டு. கூழாகவும் கிட்டியும் அடையாக உபயோகிப்பதுண்டு.

பசியதனை யாற்றும் பலமொடுவிந் தூறும்
கசிவுடைய பேதியுமே கட்டும் – உசிதமிகு
தக்கார்வாய் வென்றிதனைச் சாற்றிடுவர் மாதரசே
மக்காச்சோ ளத்தால் மகிழ்

குணம்

மக்காச்சோளம் பசியடக்கும், உடலுக்கு பலம் கொடுக்கும், விந்து இருக்கச்செய்யும், பேதி முதலியவற்றை கட்டும்.

பயன்கள்

  • மக்காச்சோளத்தின் மாவின் உபயோகத்தால் பலவீனம் நீங்கி தேகம் நல்ல பலம் பெறும்.
  • மூளை வளர்ச்சியையும் , நரம்புமண்டலங்களையும் நன்கு செயல்படவைக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
  • எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. கண் பார்வையை அதிகரிக்கும்.
  • மக்காச்சோளத்தின் மாவை கட்டிகளுக்கு வைத்து கட்ட உடைத்துக்கொள்ளும்.
  • மக்காச்சோளமாவுடன் வெல்லம் சேர்த்து சத்துமாவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Leave a Comment

3 − 1 =

error: Content is protected !!