மூலிகைகள்

இரத்தக்குழாயில் படியும் கொழுப்பை கரைக்கும் பூண்டு

பூண்டு மலையிலும், நிலக்காட்டிலும் விளைகிறது, இது வெங்காயத்தை போலவே பயிரிடப்படுகிறது. இது நல்ல மணமும் காரத்தன்மையும் உடையது. எல்லா வீடுகளிலும் நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளது.

மருத்துவ பயன்கள்

  • வயிற்றுப்பிரச்னை உள்ளவர்கள் தினமும் 2 பூண்டுப்பல் சாப்பிட்டுவந்தால் விரைவில் குணமடையும் அல்லது மிளகு சேர்த்து ரசமாக வைத்து சாப்பிடலாம்.
  • பூண்டு மார்பு சளியை கரைப்பதோடு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது.
  • பூண்டினை தீயில் சுட்டு பிறகு தோலை நீக்கி சாப்பிட்டு வந்தால் வாய்வுக் கோளாறினால் ஏற்படும் முதுகு பிடிப்பு, இடுப்பு பிடிப்பு, கை – கால் வீக்கம் ஆகியவை தீரும்.
  • பூண்டு இரத்தக்குழாயில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. மேலும் இரத்தம் உறைத்தலையும் தடுக்கும் ஆற்றல் உடையது.
  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொழுப்பையும் குறைகிறது.
    உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
  • பூண்டை நசுக்கி சாறு எடுத்து படை, தேமல் மீது தடவி வர விரைவில் குணமாகும்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!