அழகு

புழுவெட்டு நீங்கி முடி வளர

புழுவெட்டு தலையில் மட்டுமல்ல தாடி, மீசை, கண் , இமைகள், புருவம் ஆகியவற்றின் ரோமக்கால் பகுதிகளும் பாதிக்கப்படலாம். புழுவெட்டு சிலசமயம் ஒருவரிடமிருந்து  தொற்றக்கூடியது.

முடியின்  வேர் பகுதி பாதிக்கப்பட்டு வட்டவட்டமாக முடி கொட்டி வழுவழுப்பான சொட்டையை உண்டாக்கும். சரியான சிகிக்சை எடுத்துக்கொண்டால் புழுவெட்டை நீக்க முடியும்.

புழுவெட்டு நீங்க சில வழிமுறைகள்

  • கடுகு  எண்ணெயயை புழுவெட்டுப் பகுதியில் தடவி வந்தால் நாளடைவில் புழுவெட்டு மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.
  • புளிப்பு மாதுளம் பழத்தில்  உள்ள முத்துப்போன்ற விதைகளை சேகரித்து சாறு எடுக்கவும்.அதை லேசாக சூடாக்கி புழுவெட்டால் முடி உதிர்ந்த இடத்தில் தேய்க்கவும். காலை, மாலை இப்படிச் செய்தால் அரிப்புடன் கூடிய புழுவெட்டு குணமாகும்.முடி முளைக்கும்.
  • நாட்டு வெங்காயத்தை பாதியாக நறுக்கவும் குளிக்கும் முன் புழுவெட்டு பகுதியில் அழுத்தி தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி அரைத்து அடைபோல் தட்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைத்து தேய்த்தால் புழுவெட்டு மறைந்து முடி செழித்து வளரும்.
  • கசகசாவை பால் விட்டு அரைத்து புழுவெட்டு பகுதியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து கழுவி விடவும். இதுபோல் காலை – மாலை செய்துவர புழுவெட்டு நீங்கி   முடி வளரும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

please consider supporting us by disabling your ad blocker!