மூலிகைகள்

பீட்ரூட் மருத்துவ பயன்கள்

மருத்துவ பயன்கள் - பீட்ரூட் மருத்துவ  பயன்கள்

கிழங்குவகை காய்கறியாக பீட்ரூட்டை சமைத்தும் அல்லது கேரட் போல ஜூஸ் செய்தும் சாப்பிடலாம். இதனுடன் பருப்பு சேர்த்து சமைத்துண்ண நல்ல சுவையாக இருக்கும். இது உடல் இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

பயன்கள்

  • இது உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது.
  • பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
  • அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
  • உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
  • பீட்ரூட் மலச்சிக்கலை போக்கும், பித்தத்தை குறைக்கும்.
  • உடலில் உள்ள அரிப்பு, சிரங்கு, தீக்காயங்களுக்கு படிக்காரத்தூளுடன் பீட்ரூட் சாறு கலந்து அதன் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.
  • பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டு வந்தால் இளநரை ஏற்படாது.
  • பீட்ரூட் புதிய இரத்தத்தை உண்டாகும், இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

Leave a Comment

11 + nineteen =

error: Content is protected !!